பத்தினியார் மகிலங்குளம்

பத்தினியார் மகிலங்குளம் (Pathiniyar Mahilankulam) இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் வவுனியா பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்.[1]

பத்தினியார் மகிலங்குளம்
பத்தினியார் மகிலங்குளம் is located in இலங்கை
பத்தினியார் மகிலங்குளம்
பத்தினியார் மகிலங்குளம்
ஆள்கூறுகள்: 8°46′36.48″N 80°28′53.33″E / 8.7768000°N 80.4814806°E / 8.7768000; 80.4814806
பத்தினியார் மகிலங்குளம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
பரப்பளவு
0.16  ச.கி.மீ
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2015)
537 (161 குடும்பங்கள்)


மக்கள்

2015 ஆம் ஆண்டுத் தரவுப்படி ஆண்கள் 259 பேரும் பெண்கள் 279 பேருமாகவும் சிறுவர்கள் 155 பேருமாக 161 குடும்பங்கள் உள்ளன. 3 பேர் விசேட தேவைகளுக்கு உட்பட்டவர்களும் உள்ளனர். இக் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் வேளாண்மையிலும் கால்நடை மேய்ப்பிலும் ஈடுபடுகின்றனர். இதைவிட அரசுப் பணியிலும் சிலர் பணியாற்றுகின்றனர். இக்கிராமத்தில் வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் இருந்தாலும் இக்கிராமத்தில் இவ்வசதிகள் இல்லை ஏனைய கிராமங்களிலேயே இவர்கள் சென்று வேளாண்மையில் ஈடுபடுகின்றனர்.

பொது வசதிகள்

இவ்வூரில் உள்ளவர் அருகில் உள்ள தாண்டிக்குளம் பிரிமண்டு பாடசலையிலும் ஏனைய நகர்ப் பாடசலைகளிலும் கல்வி கற்கின்றனர். இவ்வூரில் பாடசாலைகள் இல்லை. இவ்வூரில் கமக்காரர் அமைப்பு, கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இயங்குகின்றன. இவ்வூரில் நொறுக்குத்தீனிச் தொழிற்சாலையும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பெரும்பாலானவர்களிடம் மலசலகூடம் உள்ளது. இக்கிராமத்தில் பொதுநோக்கு மண்டபமும் மயானமும் கோவில்களும் உள்ளன. இக்கிராமத்தில் மழைக்காலத்தில் நீர் வடிந்தோடாமையே பெரும் பிரச்சினையாக உள்ளது.[2].

மேற்கோள்கள்

  1. "Grama Niladhari Divisions - Vavuniya". Vavuniya Divisional Secretariat. 1 பெப்ரவரி 2012 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305002258/http://www.vavuniya.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=35&Itemid=71&lang=en. பார்த்த நாள்: 15 அக்டோபர் 2015. 
  2. "Vavuniya - Disaster Risk Reduction and Preparedness Plan". UN-Habitat Sri Lanka. pp. 91 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305003742/http://www.unhabitat.lk/downloads/DRR/DRRVavuniya.pdf. பார்த்த நாள்: 2 அக்டோபர் 2015.