பதி பக்தி (1936 திரைப்படம்)

பதி பக்தி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி (நாடகம்) நிறுவனத்தினரின் தயாரிப்பில், அலெதெகர், மற்றும் டி. ஆர். பி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. கேசவன், காளி என். ரத்னம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பதி பக்தி
இயக்கம்அலெதெகர்
டி. ஆர். பி. ராவ்
தயாரிப்புமதுரை ஒரிஜினல் பாய்ஸ் கோ.
கதைகதை பாவலர்
நடிப்புகே. டி. கேசவன்
காளி என். ரத்னம்
டி. ஆர். பி. ராவ்
கே. கே. பெருமாள்
ராதா பாய்
கே. வி. ஜானகி
சாந்தாதேவி
பி. ஆர். மங்களம்
வெளியீடு1936
நாடு இந்தியா
மொழிதமிழ்

உப தகவல்

  • இந்த பதி பக்தி திரைப்படமும், சதிலீலாவதி (1936) திரைப்படமும் ஒரே கதையைக் கொண்டிருந்தன. இது சம்பந்தமாக இப்படத் தயாரிப்பாளர்களுக்குள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரைப்படக்கதை தொடர்பாக நடந்த முதல் வழக்கு இதுவாகும்.[2]
  • முதல் கூடிப் பழகும் நடனம் (Club Dance) இடம் பெற்றது இப்படத்தில் ஆகும்.[2]
  • இப்படத்தில் நாயகனும் நாயகியும் தங்கள் மகள் லட்சுமியுடன் ஆகாஷ்வாணி (வானொலி) கேட்பதாக கதையுள்ளது. இப்படம் திரைக்கு வந்தது 1936 இல், ஆனால், மதறாஸ் வானொலி தொடங்கப்பட்டது 1938, சூன் 16 இல் தான். வானொலி, நிஜத்தில் ஒலிக்கும் முன்பே இந்தத் திரைப்படத்தில் ஒலித்தது.[2]

சான்றாதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=பதி_பக்தி_(1936_திரைப்படம்)&oldid=32776" இருந்து மீள்விக்கப்பட்டது