பதம் (சொல் விளக்கம்)
பதம் என்னும் சொல் பல பொருள்களை உணர்த்தும். அவை பதம் செழ்தலோடு தொடர்புடையவை.
- பதம் செய்த உணவு
- பதம் என்னும் சொல் சங்ககாலத்தில் சமைத்த தானிய உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படுத்தப்படும் குழம்பு, பொறியல் முதலான கூட்டுப் பொருள்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. [1].இதனை இக்காலத்தில் பதார்த்தம் என வழங்குகிறோம். அர்த்தம் எனும் சொல் பாதி என்னும் பொருளைத் தரும். பதம் பாதி, அதனோடு சேரும் அர்த்தம் பாதி என அமைவது பதார்த்தம்.
- நடத்தை
- தனிசொல்
- பெயராகவோ, வினையாகவோ, பகுபத உறுப்புக்களாகவோ அமைந்து விளங்கும் சொல். நன்னூல் தனிச்சொல்லைப் பதம் எனக் குறிப்பிடுகிறது.
- நெல்லை உணர்த்தும் சொற்களில் ஒன்று சொல்.
- நெல்லைப் பதப்படுத்தி ஆக்கும் சோறும் பதம் எனப்படும்.
- தமிழ்ச்சொல்லைப் பகுதி, விகுதி என்றெல்லாம் பதப்படுத்திக் காட்டுவது நன்னூலிலுள்ள பதவியல்.
- இந்த வகையில் பதம் என்பது தமிழ்ச்சொல். [4]