பணம் (திரைப்படம்)

இது திரைப்படத்தைப் பற்றியது. பணத்தைப் பற்றி அறிய பணம் பக்கத்தைப் பார்க்கவும்

பணம் (Panam) என்பது 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி திரைக்கதை உரையாடலை எழுதினார். இதில் சிவாஜி கணேசன், பத்மினி, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி, பி. ஆர். பந்துலு ஆகியோர் நடித்திருந்தனர். பல படங்களில் இணைந்து நடித்த சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்.[2][3]

பணம்
சுவரிதழ்
இயக்கம்என். எஸ். கிருஷ்ணன்
தயாரிப்புஏ. எல். ஸ்ரீநிவாசன்
மதராஸ் பிக்சர்ஸ்
கதைமூலக்கதை : என். வி. பாபு
திரைக்கதை - வசனம் : மு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
என். எஸ். கிருஷ்ணன்
வி. கே. ராமசாமி
எஸ். எஸ். ராஜேந்திரன்
கே. ஏ. தங்கவேலு
பி. ஆர். பந்துலு
பத்மினி
டி. ஏ. மதுரம்
வி. சுசீலா
எஸ். டி. சுப்புலட்சுமி
கொட்டாப்புளி ஜெயராமன்
சந்திரா
தனம்
எம். ஆர். சாமிநாதன்
டி. கே. ராமச்சந்திரன்
சி.எஸ்.பாண்டியன்
சி. வி. வி. பந்துலு
கே. சந்திரசேகரன்
வி.பி.எஸ்.மணி
கரிக்கோல்ராஜ்
முத்துப்பிள்ளை
தாமோதரன்
ரங்கநாதன் [1]
ஒளிப்பதிவுமோகன் ராவ்
படத்தொகுப்புதேவராசன்
வெளியீடுதிசம்பர் 27, 1952
ஓட்டம்.
நீளம்17480 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

  • படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் பெயர்களின்படி குறிப்பிடப்பட்டுள்ளது

நடிகர்கள்

நடிகைகள்
நடனம்

தயாரிப்பு

இப்படத்தை மதராஸ் பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் ஏ. எல் .சீனிவாசன் தயாரித்தார். இது அவரின் முதல் தயாரிப்பு ஆகும். இப்படத்தின் பாரதிதாசனின் ஒரே ஒரு பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களையும் ஏ. எல். சீனிவாசனின் சகோதரர் கண்ணதாசன் எழுதினார். இப்பட்டத்தில் சிவாஜியம் பத்மினியும் இணைந்து நடித்தனர் இது அவர்கள் இணைந்து நடித்த முதல் படமாகும். அதனிபிறகு இந்த இணை 60 படங்களுக்கு மேல் இணைந்து நடித்தது. இது சிவாஜிகணேசனின் இரண்டாவது திரைப்படம். 'பராசக்தி' வெளியாகி 2 மாதங்களுக்குப் பின் இத்திரைப்படம் வெளியாகியது. பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தயாராகி வந்தன. பராசக்தி வெளிவருவதில் கொஞ்சம் தாமதமாகியிருந்தால், சிவாஜியின் முதல் திரைப்படமாக பணம் அமைந்திருக்கும்.

பாடல்கள்

அப்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்தனர்.[4] அவர்கள் இணைந்து இசையமைத்த முதல் படம் இதுவாகும். இப்படத்தில் திமுக பற்றி பாடல் இருக்கவேண்டும் என்று படக்குழு விரும்பியது. ஆனால் தணிக்கைக் குழு அனுமதிக்காது என்பதால் திமுக என்று வருமாறு 'தினா முனா கானா' என்ற பாடலை கண்ணதாசன் எழுதினார். அதாவது திருக்குறள் முன்னணி கழகம் என்று பாடலில் வந்தது. அப்பாடலை என். எஸ். கிருஷ்ணன் பாடினார்.[5] பாடல் வரிகளை பாவேந்தர் பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் எழுதினர். பாடல்களை என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், சி. எஸ். பாண்டியன் மற்றும் பின்னணிப் பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன், ஜி. கே. வெங்கடேசு, எம். எல். வசந்தகுமாரி, டி. வி. ரத்தினம், ராதா ஜெயலட்சுமி ஆகியோர் பாடினர்.[6]

எண். பாடல் பாடகர் வரிகள் நீளம் (நி:நொ)
1 "எங்கே தேடுவேன்...பணத்தை எங்கே தேடுவேன்" என். எஸ். கிருஷ்ணன் கண்ணதாசன் 02:21
2 "குடும்பத்தின் விளக்கு" எம். எல். வசந்தகுமாரி 02:28
3 "தினா முனா கனா" என். எஸ். கிருஷ்ணன் 01:41
4 "இதயத்தை இரும்பாக்கி...மனமுடையோரை மனிதர்கள் என்றும்" டி. வி. ரத்தினம் 02:02
5 "ஆணுக்கோர் நீதி பெண்ணுக்கோர் நீதி" டி. ஏ. மதுரம் 02:01
6 "என் வாழ்வில் புது பாடமா" ராதா ஜெயலட்சுமி 02:02
7 "ஏழை நின் கோவிலை" எம். எல். வசந்தகுமாரி, ஜி. கே. வெங்கடேஷ் 03:30
8 "பணத்தினாலே மனுசரோட" சி. எஸ். ஜெயராமன் 03:40
9 "உங்கொப்பனை கேட்டே முடிப்பேன்" சி. எஸ். பாண்டியன் 01:07
10 "மானத்துடன் வாழ்வோம்" என். எஸ். கிருஷ்ணன், (இராதா) ஜெயலட்சுமி 02:33
11 "பசியென்று வந்தால்" பாவேந்தர் பாரதிதாசன்

மேற்கோள்கள்

  1. https://www.youtube.com/watch?v=yeLIbGvO27A
  2. "Panam". spicyonion.com. http://spicyonion.com/movie/panam/. 
  3. Randor Guy (12 February 2012). "Panam 1953". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/panam-1953/article2884075.ece. 
  4. "Panam Songs". http://play.raaga.com/tamil/album/panam-T0001753. 
  5. G. Neelamegam (in Tamil). Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108. First edition December 2014. பக். 38–39. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பணம்_(திரைப்படம்)&oldid=35179" இருந்து மீள்விக்கப்பட்டது