பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம் (Foreshore Estate) தமிழ்நாடு, சென்னை மாநகரில் தெற்கே வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள கடற்கரை குடியிருப்புப் பகுதியாகும். இதன் மேற்கு பகுதியில் மயிலாப்பூரும், தென் பகுதியில் அடையாறும், வடக்கு பகுதியில் சாந்தோமும் அமைந்துள்ளது. சென்னை வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், சீனிவாசபுரம், முள்ளிமாநகர், நம்பிக்கைநகர், ராஜீவ்காந்தி நகர் போன்ற மீனவர் குடியிருப்புகளும் நிறைந்துள்ள பகுதியாகும். விநாயக சதுர்த்தி பண்டிகையின் முடிவில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் இடங்களில் பட்டினப்பாக்கமும் ஒன்றாகும். தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் இது மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலுள்ளது. இந்திய மக்களவைத் தொகுதியில் தென்சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்டதாகும்.[1][2][3]

பட்டினப்பாக்கத்தில் கணேசர் சிலைகள் கடலுக்கு எடுத்துச் செல்லல்

அமைவிடம்



மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பட்டினப்பாக்கம்&oldid=40754" இருந்து மீள்விக்கப்பட்டது