பகாப்பதம்
தமிழ் இலக்கணத்தில் பகாப்பதம் என்பது மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். பகா என்பது பிரிக்கமுடியாது என்றும், பதம் என்பது சொல் என்றும் இங்கு பொருள் தருகின்றன.
பகாப்பதம் ஏழு எழுத்துக்கள் வரை எழுத்துக்களைக் கொண்டிருக்கும். [1]
எடுத்துக்காட்டு (அடைப்புக்குறிக்குள் எழுத்தெண்ணிக்கை)
- அணி (2), அறம் (3), அகலம் (4), அருப்பம் (5), தருப்பணம் (6), உத்திரட்டாதி (7)
எடுத்துக்காட்டுக்கள்
- ஆ
- மா
- பா
- படம்
- ஆம்
- பட்டம்
- படம்
அடிக்குறிப்பு
- ↑ நன்னூல் 130