நெவின்ஸ் செல்வதுரை
நெவின்ஸ் செல்வதுரை (Nevins Selvadurai, 15 அக்டோபர் 1863 – 28 ஏப்ரல் 1938) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை உறுப்பினரராகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகவும் இருந்தவர்.
நெவின்ஸ் செல்வதுரை Nevins Selvadurai | |
---|---|
இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1934–1935 | |
பின்வந்தவர் | வைத்திலிங்கம் துரைசுவாமி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1863 |
இறப்பு | 28 ஏப்ரல் 1938 | (அகவை 74)
படித்த கல்வி நிறுவனங்கள் | யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சென்னை மாநிலக் கல்லூரி |
தொழில் | ஆசிரியர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
ஆரம்ப வாழ்க்கை
செல்வதுரை 1863 அக்டோபர் 15 இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] வட்டுக்கோட்டை ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணம் உவெசுலியன் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். 15 வயதில் சென்னை, மாநிலக் கல்லூரியில் சேர்ந்து அறிவியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1]
முத்துசுவாமி வாட்சன் என்பவரின் மகள் மார்கரெட் அன்னி பாப்பம்மா என்பவரை 1889 இல் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்குப் பல பிள்ளைகள் இருந்தனர்.
ஆசிரியப் பணி
பட்டம் பெற்றுத் திரும்பிய பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார்.[1] 1892 முதல் 1926 வரை இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.[1] பின்னர் 1909 ஆம் ஆண்டு முதல் கண்டி திரித்துவக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார்.[2] 1923 சூன் மாதத்தில் கல்வியில் இவரது சேவைக்காக பிரித்தானிய இராச்சியத்தின் ஆணை விருது (Order of the British Empire) வழங்கப்பட்டது[3]
அரசியலில்
ஆசிரியப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், கல்வி வாரியன், பல்கலைக்கழகக் கல்லூரிப் பேரவை போன்ற பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.[1]
1934 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைக்கு ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் உறுப்பினரானார்.[1][4][5] 1936 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அருணாசலம் மகாதேவாவிடம் தோற்றார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 188–189. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 91
- ↑ "Supplement". The London Gazette. 2 சூன் 1923. http://www.london-gazette.co.uk/issues/32830/supplements/3951.
- ↑ Rajasingham, K. T.. "Chapter 7: State Councils - elections and boycotts". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2009-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090624090234/http://atimes.com/ind-pak/CI22Df02.html. பார்த்த நாள்: 2013-06-11.
- ↑ Dissanayake, T. D. S. A.. "Chapter 1". War or Peace.... http://www.sangam.org/ANALYSIS/DissanayakaChap1.htm.