நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் (ஆங்கிலம்:Nellikuppam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்குகிறது.

நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம்
இருப்பிடம்: நெல்லிக்குப்பம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°45′N 80°06′E / 12.75°N 80.10°E / 12.75; 80.10Coordinates: 12°45′N 80°06′E / 12.75°N 80.10°E / 12.75; 80.10
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் பண்ருட்டி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
நகராட்சி துணை தலைவர் கிரிஜா திருமாறன்
மக்கள் தொகை 46,678 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 10,763 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 46,678 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 82.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5072 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 966 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 16,826 மற்றும் 32 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 75.69%, இசுலாமியர்கள் 21.7%, கிறித்தவர்கள் 2.29%, தமிழ்ச் சமணர்கள் 0.19%, மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[4]

நெல்லிக்குப்பத்தில் சமூக அமைப்புகள்


சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் திருவள்ளுவர் மன்றம் 1950 ல் செயற்பட்டது. பகுத்தறிவாளர் கழகம் 1985 முதல் 2000ம் ஆண்டு வரை செயற்பட்டது. வாசகர் வட்டம் இது அரசு நூலகத்தின் வாசகர் வட்டமாகும் . இது சுமார் 20 ஆண்டு காலம் செயற்பட்டது. மாந்த நலச் சிந்தனையாளர் பேரவை,தமிழின இளைஞர் குழு,தமிழினியர் நூலக வாசகர் வட்டம், நகர வளர்ச்சி குழு, அறிவாலயம் போன்ற பல சமூக நல அமைப்புகள் நெல்லிக்குப்பத்தில் செயல்பட்டன.


நெல்லிக்குப்பம் இதழ்கள்

1950ல் நெல்லிக்குப்பத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கிளை செயலராக இருந்த தையலர் இராசகோபால் என்பவர் திராவிட முரசு என்ற இதழை நடத்தினார்.

துரைமாணிக்கம் என்கிற பெருஞ்சித்திரனார் 1960 க்கு முன்பு நெல்லிக்குப்பத்தில் அஞ்சலகத்தில் பணிபுரிந்த போது தென்மொழி என்ற இதழை தொடங்கினார் . அந்த இதழ் இப்போதும் சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழ் புத்தாண்டு பொங்கல் மலர் அருண்மொழி சேணாவரையன் முயற்சியில் 2001 முதல் பதிமூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்தது

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. நெல்லிக்குப்பம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/index.php?title=நெல்லிக்குப்பம்&oldid=40264" இருந்து மீள்விக்கப்பட்டது