நெய்வேலி நடராசர் கோயில்

நெய்வேலி நடராசர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருவனந்தீசுவரம் என்றழைக்கப்பட்டது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 85 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°36'36.5"N, 79°30'29.2"E (அதாவது, 11.610130°N, 79.508102°E) ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக நடராசர் உள்ளார். இறைவி சிவகாமி ஆவார்.[1]

அமைப்பு

நடராசர் 10 அடி 1 அங்குலத்தில் அமைந்துள்ளதாகவும், உலகிலேயே இவர்தான் பெரிய நடராசர் என்றும் கூறுகின்றனர். அருகிலுள்ள சிவகாமி 7 அடி உயரத்தில் உள்ளார். இக்கோயிலில் நடராசருக்கு பளிங்கால் சபை அமைத்துள்ளனர். நடராசர் சன்னதிக்கு மேற்கில் செம்பொற்சோதி நாதர் சன்னதி உள்ளது. திருசசுற்றில் விநாயகர், அறம் வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோர் உள்ளனர்.[1]

விழாக்கள்

சித்திரை முதல் நாளில் இறைவனும், இறைவியும் 63 நாயன்மார்களுடனும், 12 திருமுறைகளுடனும் உலா வரும் விழா இங்கு நடைபெறுகிறது. அத்துடன் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமூலர் ஆகியோரின் குரு பூசையன்று இறைவனும், இறைவியும் திருச்சுற்றில் உலா வருகின்றனர்.[1]

மேற்கோள்கள்