நெமிலி ஊராட்சி ஒன்றியம்
நெமிலி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] நெமிலி ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நெமிலி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நெமிலியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,,498 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 39,133 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1985 ஆக உள்ளது.[2]
நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அசமந்தூர்
- அகவலம்
- அரிகிலபாடி
- அரும்பாக்கம்
- அசனல்லிக்குப்பம்
- ஆட்டுப்பாக்கம்
- அவலூர்
- சித்தேரி
- சித்தூர்
- எலத்தூர்
- கணபதிபுரம்
- இலுப்பைத்தண்டலம்
- களத்தூர்
- காட்டுப்பாக்கம்
- கீழாந்துரை
- கீழ்கலத்தூர்
- கீழ்வெண்பாக்கம்
- கீழ்வெங்கடாபுரம்
- கீழ்வீதி
- கோடம்பாக்கம்
- மகேந்திரவாடி
- மாங்காட்டுச்சேரி
- மேலாந்துரை
- மேலபுலம்
- மேலேரி
- மேல்களத்தூர்
- மேல்பாக்கம்
- முருங்கை
- நாகவேடு
- நெடும்புலி
- நெல்வாய்
- ஒச்சலம்
- பள்ளுர்
- பரமேஸ்வரமங்கலம்
- பரித்திபுத்தூர்
- பெரப்பேரி
- பெரும்புலிப்பாக்கம்
- பின்னாவரம்
- பொய்கைநல்லூர்
- ரெட்டிவலம்
- சங்கராம்பாடி
- சயனபுரம்
- செல்வமந்தை
- சிறுநமல்லி
- ஜாகீர்தண்டலம்
- திருமால்பூர்
- திருமாதலம்பாக்கம்
- துறையூர்
- உளியநல்லூர்
- வெளிதாங்கிபுரம்
- வேளியநல்லூர்
- வேப்பேரி
- வேட்டாங்குளம்