நெடுந்தீவுக் கோட்டை
நெடுந்தீவுக் கோட்டை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு என்னும் தீவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியதும், குடாநாட்டில் இருந்து கூடிய தொலைவில் அமைந்திருப்பதும் நெடுந்தீவே ஆகும். நெடுந்தீவின் வடக்குக் கரையோரத்தில், சிறிய கடற்கலங்கள் பயன்படுத்தும் இறங்குதுறை ஒன்றுக்கு அருகில் இக்கோட்டை அமைந்துள்ளது. 2004ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் இடிபாடுகளாகவே காணப்படுகின்றது. இது முருகைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது[1].
நெடுந்தீவுக் கோட்டை Delft Island Fort | |
---|---|
நெடுந்தீவு, இலங்கை | |
நெடுந்தீவுக் கோட்டை | |
ஆள்கூறுகள் | 9°32′27″N 79°40′40″E / 9.540736°N 79.677769°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | எச்சம் |
இட வரலாறு | |
கட்டியவர் | போர்த்துக்கேயர் |
கட்டிடப் பொருள் |
சுண்ணக்கல், பவளப்பாறை |
குறிப்புகள்
- ↑ Nelson, W. A., 2004. ஆர். கே. டி சில்வா புதிதாகச் சேர்த்த விவரங்கள். பக். 101c.
உசாத்துணைகள்
- Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).