நூல் வேலி
நூல்வேலி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். கமல்ஹாசன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டது. தெலுங்கில் 'குப்பெடு மனசு' எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
நூல்வேலி | |
---|---|
நூல்வேலி திரைப்பட ஒலிநாடாவின் அட்டைப்படம் | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | கோவிந்தராஜன் துரைசாமி (கலாகேந்திரா மூவிஸ்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சரத் பாபு சுஜாதா சரிதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | செப்டம்பர் 7, 1979 |
நீளம் | 3915 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தயாரிப்பு
நூல் வேலி மலையாள மொழியில் வெளியான 'ஆ நிமிஷம்' (1977) திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.[1]
பாடல்கள்
எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | நானா பாடுவது நானா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், எல்.ஆர். அஞ்சலி | கண்ணதாசன் |
2 | தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் |
3 | வீணை சிரிப்பில் ஆசை அணைப்பில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | கண்ணதாசன் |
4 | மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | கண்ணதாசன் |
மேற்கோள்கள்
- ↑ "சினிமா ஸ்கோப் 27: வெள்ளித்திரை". இந்து தமிழ். 16 பிப்ரவரி 2017 இம் மூலத்தில் இருந்து 10 சூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210710090104/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/186284-27.html. பார்த்த நாள்: 10 சூலை 2021.