நூலுக்குப் பெயரிடும் முறை
நூலுக்குப் பெயரிடும் முறை என்று நன்னூல் சில வழிமுறைகளை விளக்கியுள்ளது.
பெயரிடும் முறைகள்
ஒரு நூலுக்குப் பெயரிடும்போது பின்பற்றக்கூடிய வழிமுறைகளாக நன்னூல் காட்டுவது:
- நூலுக்குரிய முதல் நூலின் பெயர் - இராமாயணம், பாரதம்
- நூலை இயற்றிய கருத்தாவின் பெயர் - அகத்தியம், தொல்காப்பியம்
- நூலின் அளவை முன்னிறுத்தும் பெயர் - நாலடியார், புறநானூறு
- நூலில் காணப்படும் பெரும்பான்மைப் பொருளின் பெயர் - களவியல்
- நூலில் அமைந்திருக்கும் பொதுப் பொருளின் பெயர் - அகப்பொருள்
- நூலைச் செய்வித்தவனை முன்னிறுத்தும் பெயர் - வீரசோழியம்
- நூலின் இயல்பை முன்னிறுத்தும் பெயர் - சிந்தாமணி, நன்னூல்
- நூலில் கூறப்படும் பொருளில் சிறப்புடையதின் பெயர் - வெற்றிவேற்கை, ஆத்திச்சூடி
- நூலின் காரணத்தை முன்னிறுத்தும் பெயர் - நிகண்டு
முதலான காரணங்களின் அடிப்படையில் ஒரு நூலுக்குரிய பெயர் அமையும்.[1]