நூற்பா
சூத்திரம் என நன்னூல் குறிப்பிடுவதை நூற்பா என வழங்குகின்றனர். [1]
சூத்திரம் விளக்கம்
சூத்திரம் எவ்வாறு இருக்கும் என நன்னூல் விளக்குகிறது. [2]
- சில எழுத்துக்களால் அமைந்து சுருக்கமாக இருக்கவேண்டும்.
- சுருக்கத்தில் பல்வகைப் பொருளும் செறிவாக இனிமையாக விளக்கப்பட்டிருக்க வேண்டும்
- கண்ணாடி பொருளைக் காட்டுவது போலப் பொருளைக் காட்டுவதாக இருக்கவேண்டும்.
- திட்பமும், நுட்பமும் கொண்டிருக்கவேண்டும்
சூத்திரநிலை
ஒரு சூத்திரம் ஏனைய சூத்திரங்களோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கவேண்டும் என்பதையும் நன்னூல் விளக்குகிறது. [3]
- முன்னும், பின்னும் தொடர்புடையதாக ஆற்றில் தண்ணீர் ஒழுகுவது போலத் தழுவிக்கொண்டு நடக்கும்.
- முன்னும் பின்னும் தொலைவிலுள்ள இரையை அரிமா(சிங்கம்) பார்ப்பது போல, முன்னும் பின்னும் தொலைவில் உள்ள நூற்பாக்களை நோக்கி முரண்பாடு இல்லாமல் சொல்லும்.
- தவளை தத்திப் பாய்வது போல சில நூற்பாக்களை இடைவிட்டுத் தவ்விப் பாய்ந்து அமர்ந்து பொருள் கொள்ள வைக்கும்.
- பருந்து வானத்திலிருந்து வீழ்ந்து இரையைக் கவ்வுவது போல எங்கிருந்தோ பாய்ந்து கருத்தைச் சொல்வதும் உண்டு.
சூத்திரத்தைக் குறிக்கும் காரணப் பெயர்கள் [4]
- பிண்டம் – கருப்பொருளாக அமைவது
- தொகை – தொகுத்துக் கூறுவது
- வகை – பிரித்து வகைப்படுத்திக் கூறுவது
- குறி –குறிக்கோளைப் பற்றி வழுவாமல் செல்வது.
- செய்கை – தான் நாட்டும் செயலைக் கூறுவது
- கொண்டியல் – பிறர் கூறியனவற்றை தானும் அப்படியே ஏற்றுக்கொண்டு அவர் நூற்பாவையே தானும் கூறுதல்.
- புறனடை – தொகுப்புலை போல முடிவுரையில் கூறுதல்
கருவிநூல்
- நன்னூல் மூலம்
அடிக்குறிப்பு
- ↑ சூத்திரம் என்பதையும் தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம்.
- கோத்து இருப்பது கோத்திரம்,
- ஆர்த்து வருவது ஆத்திரம்
- ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது – என முண்டிக்கொண்டு மூர்த்து வருவது மூத்திரம்.
- இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம் > சூத்திரம்
- ↑
- சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
- செவ்வன் ஆடியின் செறித்து இனிது விளக்கித்
- திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம் – நன்னூல் நூற்பா 18
- ↑ ஆற்றொழுக்கு, அரிமா நோக்கு, தவளைப் பாய்த்து, பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை – நன்னூல் நூற்பா 19
- ↑ நன்னூல் நூற்பா 20