நுண் அறிவியல் (இதழ்)

நுண்அறிவியல் இதழ் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 1998ம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த பொது உளச்சார்பு கல்வி சார்ந்த ஓர் இதழாகும். பொது உளச்சார்பு என்ற பரந்த நுண்அறிவியலை பயிலக்கூடிய வகையிலும் இலங்கையில் நடைபெறக்கூடிய பொதுப் பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் இவ்விதழ் வெளிவந்தது.

ஆசிரியர்குழு

ஆசிரியர்

  • கலாநிதி க.குணராசா

துணை ஆசிரியர்கள்

  • ஆ. இராஜகோபால்
  • திருமதி கமலா குணராசா

புதிப்பாசிரியர்

  • கந்தசாமி ராஜேந்திரன்

பணிக்கூற்று

பொது அறிவு பொது உளச்சார்பு ஏடு

உள்ளடக்கம்

இவ்விதழில் பல்வேறு தரப்பட்ட பொது உளச்சார்பு பகுதிகளும், பொது அறிவுப் பகுதிகளும், பொது அறிவுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/index.php?title=நுண்_அறிவியல்_(இதழ்)&oldid=14917" இருந்து மீள்விக்கப்பட்டது