நுச்சுங்கி ரென்த்லே

நுச்சுங்கி ரென்த்லே, (1 ஜனவரி 1914 - 1 ஜனவரி 2002) இந்தியாவின் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த, இவர் பிரபலமான பாடகி, மிசோ மொழிக் கவிஞர், மற்றும் பள்ளி ஆசிரியராவார்,குறிப்பாக இவர் மிசோ மொழியில் எழுதப்பட்ட கவிதைகளின் வழியே இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். [1] 1939 ம் ஆண்டில் பெண்களின் உரிமைகளுக்காக நிறுவப்பட்ட அமைப்பான பெண்களுக்கான துணை என்பதின் நிறுவனராவார். இவரது சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் 1986 ம் ஆண்டில் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது [2]

நுச்சுங்கி ரென்த்லே
இயற்பெயர்/
அறியும் பெயர்
நுச்சுங்கி ரென்த்லே
பிறந்ததிகதி (1914-01-01)1 சனவரி 1914
பிறந்தஇடம் பிரித்தானிய இந்தியா
இறப்பு 1 சனவரி 2002(2002-01-01) (அகவை 88)
பணி எழுத்தாளர், பாடகி மற்றும் கவிஞர்
குறிப்பிடத்தக்க விருதுகள் பத்மசிறீ
துணைவர் ஆர். ருவல்குமா
பிள்ளைகள் 6

வாழ்க்கை வரலாறு

நுச்சுங்கி ரென்த்லே, 1914 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரத்தின் தலைநகரான அய்சாலில் , ஹ்மிங்கிலியானா என்பவருக்கு பிறந்தார்,[3] அவர் தனது பள்ளிப்படிப்பை மிசோரத்தின் லுங்லேயில் உள்ள பாப்டிஸ்ட் மிஷனரி நிறுவனப் பள்ளியில் முடித்துள்ளார். பள்ளிப்பருவத்திலேயே பல்வேறு கற்பனைக் கதைகளையும் புனைகதைகளையும் எழுதியுள்ளார்.[1] ஒரு பள்ளி ஆசிரியராக தனது தொழில்முறை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், பல்வேறு மிசோரிய கவிதைகள், குழந்தைப்  பாடல்கள் மற்றும் கதைகளையும் எழுத தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில் பிரபலமான பாடகராகவும் இருந்துள்ளார். அங்குள்ள குழந்தைகள் தங்கள்  பாரம்பரிய நடனங்களைக் கற்றுக்கொள்ள ஒரு நடனப் பள்ளியையும் நடத்தியுள்ளார்.[1] ருவல்குமா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஆறு குழந்தைகள் உள்ளார்கள்.[4]

இவரது இலக்கிய மற்றும் பொதுச் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்திய அரசாங்கம் 1986 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கெரவப்படுத்தியது. [2] பத்மஸ்ரீவிருதினை மிசோரம் மாநிலத்திலிருந்து பெற்றுள்ள மூன்றாவது ஆளுமையும் முதலாவது பெண்ணும் இவரே. [5]

2002 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று இவரது எண்பத்தி எட்டாவது பிறந்தநாளிலேயே  மரணித்துள்ளார். [3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Nuchhungi Renthlei (1914-2002)". India Online. 2015. http://www.indiaonline.in/about/Personalities/WritersandPoets/Nuchhungi-Renthlei.html. 
  2. 2.0 2.1 "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
  3. 3.0 3.1 "Shrimati Nuchhungi Renthlei". Aizawl Online. 2015 இம் மூலத்தில் இருந்து 31 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150831092754/http://tribute.aizawlonline.in/Nuchhungi-Renthlei-147. 
  4. . 
  5. "21 Mizos honoured Padma Shree Awards till date". Seven Diary. 2015 இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160203045130/http://sevendiary.com/21-mizos-honoured-padma-shree-awards-date/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நுச்சுங்கி_ரென்த்லே&oldid=18843" இருந்து மீள்விக்கப்பட்டது