நீதி இலக்கியம்

நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் பல்கிப் பெருகின. சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட்டு, தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாவண்ணம் தடையான சூழல் நிலவியதாகக் கருதப்படுகிறது.[1] இக்காரணத்தால் களப்பிரர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது.[2][3] இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும், பின் தள்ளப்பட்டு, அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.[4][5]

பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று தொகுக்கப்பட்டுள்ளவையே நீதி இலக்கிய நூல்கள் என்று கருதப்படுகிறது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலியவை இத்தொகுப்பில் அடங்கும்.

நீதி இலக்கியங்களின் பட்டியல்

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. திருக்குறள்
  6. திரிகடுகம்
  7. ஆசாரக்கோவை
  8. பழமொழி நானூறு
  9. சிறுபஞ்சமூலம்
  10. ஏலாதி
  11. முதுமொழிக்காஞ்சி

மேற்கோள்கள்

  1. "நீதிநூல்கள்". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். http://www.tamilvu.org/courses/diploma/d041/d0411/html/d0411661.htm. பார்த்த நாள்: ஏப்ரல் 7, 2015. 
  2. ந. எழிலரசன் (டிசம்பர் 2013). "‘களப்பிரர் காலம் இருட்டடிப்புக்காலம்’". உங்கள்நூலகம். http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagamapr14/26378-2014-04-25-06-50-58. பார்த்த நாள்: ஏப்ரல் 7, 2015. 
  3. “பல்வேறு அறநூல்கள் தோன்றிய இக் கால கட்டத்தை இருண்ட காலம் என்பது, அறிவுரை வழங்கி கட்டுப்பாட்டுடன் நடந்து நல்வழிப்படுத்த நினைக்கும் ஆசிரியரை வெறுக்கும் மாணவர்களின் மனநிலை போன்ற தாகும். எனவே களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்பது அர்த்தமற்றதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று சொல்வது வரலாற்று இருட்டடிப்பே எனத் துணிந்து கூறலாம். - ந.எழிலரசன்
  4. முதல் 1௦௦௦ ஆண்டிற்கும் தற்கால 1௦௦௦ ஆண்டிற்கும் இடைப்பட்ட 1௦௦௦ ஆண்டுகளில் தமிழர் அல்லாதார் ஆட்சி புத்தமும், சமணமும் பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் கோலோச்சின. இன்றைய ஆங்கில ஆதிக்கத்தை விட தமிழர் தம் நாகரிக பண்பாட்டுச் செல்வமனைத்தும் சமஸ்கிரத மயமாக்கப்பட்டன. இச்சூழலில் தான் களப்பிரர்கள் இங்கு நிலையாக ஆளமுடியாவிட்டாலும் தமிழகம் முழுவதும் குழப்பிக் களேபரம் ஆனது. இதை இருண்ட காலம் என்பர். உண்மையில் அது இருண்ட காலமல்ல. வரலாற்றுச் சான்றுகளைத் திரட்டவியலாத நிலையில் அதற்கு வரலாற்று ஆசிரியர்கள் இருண்டகாலம் எனப் பெயரிட்டுள்ளனர். அதனை இருண்ட காலம் எனச் சொல்வதை விட அறங்களும் அறநூல்களும் திரண்ட காலம் எனக் கூறுவது தான் பொருத்தமுடையதாகும். -முனைவர் ஆ.அரிகிருஷ்ணன்.
  5. முனைவர் ஆ.அரிகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர் – தமிழ்த்துறை இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுரி செங்கல்பட்டு (மார்ச் 14, 2014). "நீதி இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள்". தமிழன் குரல் இம் மூலத்தில் இருந்து 2014-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140701065420/http://tamizhankural.com/tamil-conference-in-chengalpattu/. பார்த்த நாள்: ஏப்ரல் 7, 2015. 
"https://tamilar.wiki/index.php?title=நீதி_இலக்கியம்&oldid=10685" இருந்து மீள்விக்கப்பட்டது