நீச்சல் நடனம்
நீச்சல் நடனம் சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. கழார் என்னும் ஊரிலுள்ள காவிரியாற்றுத் நீர்த்துறையில், அரசன் கரிகாலன், அவன் மகள் ஆதிமந்தி முன்னிலையில், ஆட்டனத்தி, காவிரி என்னும் நீச்சல்மகள் இருவரும் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடிக் காட்டினர். [1]
நீச்சல் நடனம்
- கழார்த் துறையில் நடைபெற்ற இந்த நீச்சல் நடனம் அரசன் கரிகாலன் முன்னிலையில் நடைபெற்றது.
- நீச்சல் தெரியாத யானை ஓடும் வெள்ளத்தில் புரள்வது போலப் புரண்டான்.
- இசை முழக்கத்துடன் இது நடைபெற்றது. அது இன்னிசையாக இல்லை. நடனத்தின் தண்பதத்தைக் காட்டும் தாள இசையாக இருந்தது.
- அவன் காலில் புனைந்திருந்த கழல் அணியைப் புரட்டிக் காட்டினான். (நீரில் மூழ்கிக்கொண்டு காலை நீருக்குமேல் தூக்கி ஆட்டிப் புரட்டிக் காட்டினான்). (Upside down feet dance)
- வயிற்றில் கட்டிய ஆடை நழுவாமல் இருக்கக் கச்சம் கட்டியிருந்தான். அத்துடன் பாண்டில் என்னும் அணிகலனும் அணிந்திருந்தான். அந்தப் பாண்டில் அணியில் மணிகள் கோக்கப்பட்டிருந்தன. அந்த மணிகள் ஒலிக்கும்படி வயிறு மட்டும் மேலே தெரியும்படி உருண்டு ஆட்டிக் காட்டினான். (Dolphin role)
- இப்படி ஆடிய அத்தியின் அணியில் இருந்தவள் காவிரி. அவள் அவனை விரும்பி நீரோட்டத்துடன் ஒளித்துக் கொண்டு சென்றாள். [4]
- (மேலும் நிகழ்ந்த்தை ஆதிமந்தி, மருதி, காவிரியாகிய நீச்சல்மகள் ஆகியோர் செய்தி பற்றிய கட்டுரையில் காணலாம்.)
அடிக்குறிப்பு
- ↑ பரணர் – அகம் 222, 226, 376
- ↑
பரதவர் கோமான்,
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை (அகம் 226) - ↑
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும்,
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்,
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ,
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின் (அகம் 222) - ↑
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு (அகம் 376)
காண்க
வெளி இணைப்புகள்
- நீருக்குள் ஆடும் ஒத்திசை நடனம் பரணிடப்பட்டது 2020-09-20 at the வந்தவழி இயந்திரம்