நிவின் பாலி

நிவின் பாலி (Nivin Pauly; மலையாளம்: നിവിൻ പോളി, பிறப்பு: அக்டோபர் 11, 1984) ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், சப்டேர்ஸ், நேரம், அருகில் ஒராள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.பிரேமம்(2015) மலையாள திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மலையாளத்தின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவாகி உள்ளார்.பெங்களுர் டேசு மற்றும் 1983 திரைப்படங்களுக்காக 2015 ஆண்டின் கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.

நிவின் பாலி
Nivin Pauly.jpg
நிவின் பாலி
பிறப்பு11 அக்டோபர் 1984 (1984-10-11) (அகவை 39)
ஆலுவா, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியா
இருப்பிடம்கொச்சி, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம்
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010 - தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
ரின்னா ஜாய் (ஆகஸ்ட் 2010 - இன்று வரை)
வலைத்தளம்
www.nivinpauly.com

ஆரம்பகால வாழ்க்கை

பாலி, அக்டோபர் 11, 1984ஆம் ஆண்டு ஆலுவா, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியாவில் பிறந்தார். நிவின் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் துறையில் பட்டம் பெற்ற பொறியியல் மாணவர். 2006 -ல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு 2 -ஆண்டுகள் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தவருக்கு , தந்தையின் இறப்பு பேரிடியாக அமையவே, வேலையை உதறிவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். அங்கு தன் தாய்க்கு உறுதுணையாக இருந்து கொண்டே, சிறு சிறு வேலைகள் செய்து கொண்டு திரைப்பட வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தவர் நிவின் பாலி. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச்சேர்ந்த நிவின் பாலிக்கு திரைப்பட வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடவில்லை.

2010-ல் வினித் சீனிவாசனுடைய 'மலர்வாடி ஆர்ட்சு கிளப்பிற்காக' நேர்முக தேர்வுக்கு சென்றவர்களில் நிவினும் ஒருவர். ஆனால் இறுதியில் படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 12 நடிகர்களில் ஒருவராகக்கூட நிவின் இடம்பெறவில்லை. நடிக்க வந்தவர்களில் ஒருவர் கழன்றுகொள்ளவே, மனம் தளராமல் இறுதியில் தன்னை நடிப்பில் மெருகேற்றிக்கொண்டு கலந்து கொண்டு, படத்திற்குள் நேர்முக தேர்வின் மூலம் நுழைந்தார் நிவின். இது அவருடைய விடாமுயற்சியின் விளைவாகத் திறந்த ஒரு நம்பிக்கையான கதவு.

படத்திற்குள் அறிமுகம் கிடைத்த வருடத்திலேயே தான் காதலித்த, தன் கல்லூரித்தோழி ரின்னா சாயினை மணந்து கொண்டார். திருமணத்திற்குப்பின் 'டிராஃபிக்', 'மெட்ரோ' என தன் கேரியரில் அடுத்தடுத்து கிடைத்த படங்களிலும் சின்னவேடமாக இருந்தாலும், தன்னை உருமாற்றிக்கொண்டு வெளுத்து வாங்கினார். பின்னர் 2012-ல் வெளியான 'தட்டத்தின் மறையத்து' என்றொரு மலையாளப்படம், அவருடைய திரைவாழ்வில் ஒரு அதிரடி திருப்புமுனையைத் தந்தது. ஒரு முஸ்லீம் பெண்ணிடம், காதல் வயப்பட்டவராய் உருகி, உருகி நடித்து கைத்தாட்டலை அள்ளியிருப்பார் நிவின். ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று நன்கு புரிந்து கொண்டு, அடுத்தடுத்து தேர்வு செய்யும் படங்களில் முந்தைய சாயல் இருந்துவிடக்கூடாது என மெனக்கெட்டு வெரைட்டியுடன் நடிக்கத்தொடங்கியிருந்தார். அப்படி ஒரு மாற்றத்திற்கு கிடைத்த அங்கீகார வெற்றிகள் தான் "நேரம், 1983, பெங்களூர் டேஸ், வடக்கன் செல்பி, பிரேமம்' என நீண்டது. நேரம் படத்திலேயே தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் யதார்த்தமான நடிப்பில் கலக்கியவர். மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம், மலர் ஆசிரியர் புகழால் தமிழ் ரசிகர்களையும் கவனிக்க வைத்துவிட்டார். மலையாளத்திலிருந்து ஒரு மொழிமாற்றம் இல்லாத திரைப்படம் தமிழ் நாட்டில் ஹிட்டாயிருந்தால், அது "பிரேமம்" படம் மட்டுமே.

இதன் மூலம் அவரது வளர்ச்சி தமிழ், மலையாள சினிமாக்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றே கூறலாம். இதை சரியாகப் புரிந்துகொண்ட பின், எடுத்த முக்கிய அவதாரம் தான் தயாரிப்பாளர் அவதாரம். இதில் ஹீரோவும் அவரே தான். ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இப்படத்தில் மலையாள இயக்குநர் ஜீத்து ஆன்டணி ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படம் தான் 'ஆக்ஷன் ஹீரோ பிஜு'. அபிரித் சைன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக புதுவேடம் ஏற்றுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2010 மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் பிரகாசன் முதல் திரைப்படம்.
ஐ.ஏ.பே.யின் வளர்ந்து வரும் நடிகருக்கான விருது.[1][2]
2011 டிராபிக் கவுரவ வேடத்தில்
தி மெட்ரோ ஹரிகிருஷ்ணன்
செவன்ஸ் ஷௌகத்
2012 ஸ்பானிஷ் மசாலா மாத்யூஸ் கவுரவ வேடம்
தட்டத்தின் மறயத்து வினோத் நாயர் சிறந்த இணையருக்கான ஏஷ்யாநெட் திரைப்பட விருது
பூபடத்தில் இல்லாத்த ஒரிடம் முரளி
புதிய தீரங்ஙள் மோகனன்
சாப்டர்ஸ் கிருஷ்ணகுமார்
டா தடியா ராகுல் வைத்யர்
2013 மை பான் ராமு நிவின் பாலி
நேரம் மாத்யூ (மலையாளம்)
வெற்றி (தமிழ்)
முதல் தமிழ்த் திரைப்படம்
இங்கிலீஷ் சிபின்
5 சுந்தரிகள் ஜினு
அரிகில் ஒராள் இச்ச
2014 1983 ரமேஸன்
ஓம் சாந்தி ஓசானா கிரி மாதவன் [3]
பெங்களூர் டேஸ் கிருஷ்ணன் பி.பி (குட்டன்) [4]
மிலி படப்பிடிப்பில்.[5]
பிரேமம் ஜார்ஜ் டேவிட்
2016 ஆக்சன் ஹீரோ பிஜு

வெளி இணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நிவின் பாலி

"https://tamilar.wiki/index.php?title=நிவின்_பாலி&oldid=21903" இருந்து மீள்விக்கப்பட்டது