நா. செல்லப்பா

நா. செல்லப்பா (இ. ஜூலை 2007) ஈழத்தின் சைவ அறிஞரும் எழுத்தாளருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

நா. செல்லப்பா இலங்கையின் அரச சேவையில் சுகாதாரப் பரிசோதகராகக் கடமையாற்றிய போது, புலமைப் பரிசில் பெற்று ஜெனீவா சென்று உலக சுகாதார நிறுவனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின் இலங்கை திரும்பி சுகாதாரப் போதனாசிரியராக பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆன்மிக சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பல சமய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது சமயப் பணியைப் போற்றும் வகையில் இந்து சமய அலுவல்கள் திணைக்களம் சைவநன்மணி என்ற பட்டத்தையும் உலக சைவப் பேரவை கௌரவ கலாநிதி பட்டத்தையும் அளித்து கௌரவித்திருந்தன. இவர் பல சமய சித்தாந்த நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் சிவஞானபோதம், திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களை ஒப்பு நோக்கி ஆய்வு ரீதியில் எழுதியிருக்கிறார். கொழும்பில் சைவ சித்தாந்த வகுப்புகளையும் நடத்தி வந்திருக்கிறார். அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.

தமது கடைசிக் காலங்களில் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நா._செல்லப்பா&oldid=2343" இருந்து மீள்விக்கப்பட்டது