நா. சின்னத்துரை
நா. சின்னத்துரை(அக்டோபர் 4, 1926) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். கதைவழிக் கூத்து, நாட்டுக் கூத்து, மரபுவழி இசை நாடகம் நடித்தார். நாட்டுக்கூத்துக்கள் பல பழக்கி அரங்கேற்றியுள்ளார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
நா. சின்னத்துரை |
---|---|
பிறந்ததிகதி | அக்டோபர் 4, 1926 |
பெற்றோர் | நாகமுத்து |
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை நாகமுத்து. இவர் நாதஸ்வரம், புல்லாங்குழல், ஆர்மோனியம் ஆகிய இசைக் கருவிகளை இசைக்கும் ஆற்றல் கொண்டவராக விளங்கியதோடு நாதஸ்வரக் கலைஞனாக நீண்ட காலம் செயற்பட்டார். தந்தை வழியாக சின்னத்துரை கலை உணர்வைவளர்த்துக் கொண்டார். நாதஸ்வரம் கற்றார்.
கலை வாழ்க்கை
சின்னத்துரை இளமையிலிருந்தே சங்கீதத்திலே விருப்பம் கொண்டிருந்தார். வாத்தியக் குழுவினருடன் சேர்ந்து பல இடங்களில் நாதஸ்வர இசை வழங்கியுள்ளார். பல நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசித்துதுள்ளார். மரபுவழி இசைநாடகங்களுக்கும், கதைவழிக் கூத்துக்களுக்கும் ஆர்மோனியம் வாசித்துள்ளார். பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினர் நடத்திய நாடகப்போட்டியிலே ’பவளக்கொடி’ நாடகத்தினை அரங்கேற்றினார். பல்கலைக்கழகத்தில் நாட்டுக்கூத்துக்கள் பழக்கி அரங்கேற்றியுள்ளார்.
கோவலன் கண்ணகி, அல்லி அர்ச்சுனா, பவளக்கொடி, ஶ்ரீ வள்ளி, சத்தியவான் சாவித்திரி, பொன்னிரவு, எம்பரத்தோர், ஏகலைவன், அனுபுத்திரன், குசலவன், தாடகை வதம் ஆகியவை இவர் நடித்த கூத்துக்களில் முக்கியமானவை . பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக்கழகம் 1998-ம் ஆண்டு நடத்திய கூத்துப் போட்டியில், இவர் நட்டுவாங்கம் செய்த பவளக்கொடி கதைவழிக்கூத்து பரிசு பெற்றது.
விருதுகள்
பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவித்துள்ளன
நல்லூர் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவை 2005-ம் ஆண்டு கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
கதைவழிக் கூத்து
- கோவலன் நாடகம் - கோவலன்
- புலேந்திரன் களவு - புலேந்திரன்
- அல்லி அருச்சுனன் - கிருஷ்ணன்
- பவளக்கொடி - கிருஷ்ணன்
மரபுவழி இசை நாடகம்
- அரிச்சந்திரா - சத்தியகீர்த்தி
- ஸ்ரீவள்ளி - நாரதர்
- பொன்னிரவு(சிவராத்திரி) - நாரதர்
- சத்தியவான் சாவித்திரி - நாரதர்
- மார்க்கண்டேயர் - நாரதர்
நாட்டுக் கூத்து
- எம்பரதோர் - எம்பரதோர்
- ஏகலைவன் - ஏகலைவன்
- குசலவன் - இலட்சுமணன்
- அனுபுத்திரனில் - குமாரன்
- தாடகை வதம் - இலட்சுமணன்
பழக்கிய நாடகங்கள்
- பவளக்கொடி - கதைவழிக் கூத்து
- சங்கிலியன் - நாட்டுக் கூத்து
- கோவலன் - நாட்டுக்கூத்து