நாஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாஸ் (Nas) என்று இசைப் பெயர் வைத்த நாசிர் பின் ஒலு டாரா ஜோன்ஸ் (Nasir bin Olu Dara Jones, பிறப்பு செப்டம்பர் 14, 1973, நியூயார்க் நகரம்) புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1994இல் இவரின் முதலாம் ஆல்பம் இல்மாட்டிக் (Illmatic) வெளிவந்தது. இன்று வரை பல ராப் இசை நிபுணர்களும் எழுத்தாளர்களும் இந்த ஆல்பம் மிகவும் உயர்ந்த ஆல்பம்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளனர். 1996இல் இவரின் இரண்டாம் ஆல்பம் இட் வாஸ் ரிட்டென் வெளிவந்து இவர் புகழுக்கு வந்தார்.
நாஸ் | |
---|---|
இயற்பெயர் | நாசிர் பின் ஒலு டாரா ஜோன்ஸ் |
பிற பெயர்கள் | நாஸ்டி நாஸ் |
பிறப்பு | செப்டம்பர் 14, 1973 |
பிறப்பிடம் | குயின்ஸ்பிரிஜ், நியூயார்க் நகரம், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா |
இசை வடிவங்கள் | ராப் இசை |
தொழில்(கள்) | ராப்பர், இசை எழுத்தாளர், இசை தயாரிப்பாளர், நடிகர் |
இசைத்துறையில் | 1991 - இன்று |
வெளியீட்டு நிறுவனங்கள் | இல் வில்/கொலம்பியா, த ஜோன்ஸ் எக்ஸ்பீரியென்ஸ்/டெஃப் ஜாம், |
இணைந்த செயற்பாடுகள் | ஏசீ, நஷான், கெலீஸ், நேசர், ஜெய்-சி, கிரிசெட் மிசெல், பிரேவ்ஹார்ட்ஸ், த கேம், ஃபாக்சி ப்ரௌன் |
இணையதளம் | டெஃப்ஜாம் இணையத்தளம் |
1999 முதல் 2005 வரை இவருக்கும் ஜெய்-சியுக்கும் நடுவில் ஒரு எதிரிடை இருந்தது. இவர்கள் இரண்டும் இந்த காலத்தில் குற்றம் பாடல்களை படைத்தனர்.
ஆல்பம்கள்
- 1994: இல்மாட்டிக் (Illmatic)
- 1996: இட் வாஸ் ரிட்டென் (It Was Written)
- 1999: ஐ ஏம்... (I Am...)
- 1999: நாஸ்ட்ரடாமஸ் (Nastradamus)
- 2001: ஸ்டில்மாட்டிக் (Stillmatic)
- 2002: காட்ஸ் சன் (God's Son)
- 2004: ஸ்ட்ரீட்ஸ் டிசைப்பிள் (Street's Disciple)
- 2006: ஹிப் ஹாப் இஸ் டெட் (Hip Hop Is Dead)
- 2008: அன்டைட்டில்ட் (Untitled) (இதற்கு முன் நிகர்) (Nigger)