நாம் இருவர் நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் என்பது சுந்தர் சி. இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா, மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் 1998 சனவரி 14 தமிழர் திருநாளான தைப்பொங்கல் அன்று வெளியானது. வணிக ரீதியாக இது ஒரு சிறப்பான வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[1] இது 1995ஆம் ஆண்டில் வெளியான ஆங்கில திரைப்படமான டூ மச் திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
நாம் இருவர் நமக்கு இருவர் | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | கே. பாலச்சந்தர் டி. சங்கர் |
கதை | சுந்தர் சி. சுபா (வசனம்) |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | பிரபுதேவா மீனா ஜெயராம் மகேஷ்வரி ஜெமினி கணேசன் செந்தில் விவேக் மணிவண்ணன் எஸ். எஸ். சந்திரன் ஆனந்த்ராஜ் |
ஒளிப்பதிவு | யு. கே. சுரேஷ் குமார் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | பி. எஸ். ஆர்ட்ஸ் |
வெளியீடு | சனவரி 14, 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
கார்த்திக் ராஜா இசையமைத்த இப்படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்று இருந்தன.
எண் | பாடல் | பாடியவர்(கள்) | நீளம் (நி:நொ) |
---|---|---|---|
1 | "இந்த சிறுபெண்ணை" | ஹரிஹரன், விபா சர்மா | 5:41 |
2 | "கட்டான பொண்ணு" | ஹரிஹரன், சாதனா சர்கம் | 4:22 |
3 | "ஆத்தி அடி ஆத்தி" | பிரியா, விபா சர்மா, பாரா | 5:45 |
4 | "அய்லசா அய்லசா" | உதித் நாராயண், பாப் சாலினி | 4:43 |
5 | "நடந்துக்கலாமா" | யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், பவதாரிணி | 5:16 |
6 | "ஹலோ மிஸ்டர்" | உதித் நாராயண், சாதனா சர்கம், அனுராதா பாவல் | 5:33 |