நாமக்கல் வட்டம்

நாமக்கல் வட்டம் (Namakkal Taluk) தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக நாமக்கல் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் 68 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2] உள்ளன[3]. தற்போது நாமக்கல், புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, நல்லிபாளையம், கீரம்பூர், மோகனூர், வளையப்பட்டி ஆகிய 7 உள்வட்டங்களும், 68 வருவாய் கிராமங்களும் உள்ளது.[4]

இவ்வட்டத்தில் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

நாமக்கல் வட்டத்தின் 2011 மக்கள்தொகை கணக்கின்படி மொத்த மக்கள் தொகை 5,41,488. இதில் ஆண்கள் 272,175 மற்றும் பெண்கள் 267,973. பாலின விகிதத்தில் 1000 ஆண்களுக்கு 985 பென்கள் எண்ணிக்கை உள்ளது. இந்த மாவட்டத்தின் படிப்பறிவு பெற்றவர் விகிதம் 70.32. ஆறு வயதிற்கு குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் ஆண் குழதைகள் 24,026 மற்றும் பெண் குழந்தைகள் 21,648 ஆகும்.[5]

மேற்கோள்கள்

  1. நாமக்கல் மாவட்ட வருவாய் நிர்வாகம்
  2. Namakkal District Revenue Administration
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2011-08-26.
  4. நாமக்கல் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  5. Namakkal Taluk Population 2011
"https://tamilar.wiki/index.php?title=நாமக்கல்_வட்டம்&oldid=128067" இருந்து மீள்விக்கப்பட்டது