நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நாட்டறம்பள்ளி வட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாட்டறம்பள்ளியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,242 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 14,768 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 185 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
நாட்ராம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- ஆலசந்தாபுரம்
- அழிஞ்சிகுளம்
- அம்பலூர்
- ஆத்தூர் குப்பம்
- ஆவரான்குப்பம்
- பண்டாரப்பள்ளி
- சிக்கன்னன்குப்பம்
- இக்லாஸ்புரம்
- கொண்டகிண்டபள்ளி
- கொத்தூர்
- கோடயஞ்சி
- கொத்தேரி
- மல்லகுண்டா
- மல்லங்குப்பம்
- நாராயணபுரம்
- நாயனசெருவை
- பாச்சூர்
- புல்லூர்
- இராமநாய்க்கன்பேட்
- சங்கராபுரம்
- சொரக்காயல்நத்தம்
- தீக்குபெட்டு
- திம்மாம்பேட்
- தெரிப்பாளகுண்டா
- தும்பேரி
- வடக்குபட்டு