நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் [பிறப்பு: திசம்பர் 31, 1947] (கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீர நாராயணமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர். நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நாஞ்சில் நாடன்
பிறந்ததிகதி திசம்பர் 31, 1947]
பிறந்தஇடம் வீர நாராயணமங்கலம்,
கன்னியாகுமரி

நாஞ்சில்நாடன், நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காகப் புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல் ஆகும்.

இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கினார்.

பெருமைகளும் விருதுகளும்

படைப்புகள்

புதினங்கள்

சிறுகதை தொகுதிகள்

  • 1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
  • 1985 வாக்குப்பொறுக்கிகள்
  • 1990 உப்பு
  • 1994 பேய்க்கொட்டு
  • 2002 பிராந்து
  • 2004 நாஞ்சில் நாடன் கதைகள்
  • சூடிய பூ சூடற்க
  • முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)
  • கான் சாகிப்
  • கொங்குதேர் வாழ்க்கை

கவிதை

  • 2001 மண்ணுள்ளிப் பாம்பு
  • பச்சை நாயகி
  • வழுக்குப்பாறை
  • புளிக்கும் ஆப்பழம்

கட்டுரைகள்

  • 2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
  • 2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
  • நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
  • தீதும் நன்றும்
  • திகம்பரம்.
  • காவலன் காவான் எனின்
  • அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)
  • அகம் சுருக்கேல்
  • எப்படிப் பாடுவேனோ?
  • 2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)

கருத்துக்கள்

இவர் தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பற்றி குறிப்பிடுகையில் காலம் கடந்து இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்[2]. சாகித்ய அகாடமி அரசியல் மற்றும் பணபலத்தின் செயல்பாட்டுக் களமாகி விட்டது. அங்கு வெறும் கல்வியாளர்களின் கைதான் ஓங்கி உள்ளது. அவர்கள் மரபு இலக்கியங்களை முழுமையாக படிப்பதில்லை. அரசியல் செல்வாக்கோ, பண செல்வாக்கோ இருந்தால் விருதை பெறவேண்டியதில்லை, வாங்கிவிடலாம் என்கிறார். எனக்கு முன்னால் மிகப் பெரிய தகுதியுடையவர்கள் 20 முதல் 30 பேர் வரை விருது பெற காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் 25 பேருக்கு இந்த விருதை வழங்கலாம்[3] என்றும் கூறியுள்ளார்

மேற்கோள்கள்

https://nanjilnadan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D1/

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=நாஞ்சில்_நாடன்&oldid=4871" இருந்து மீள்விக்கப்பட்டது