நவீன் திசாநாயக்க

நவீன் திசாநாயக்க (Navin Dissanayake, பிறப்பு: செப்டம்பர் 9 1969), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பொது முகாமைத்துவ கட்டமைப்பு அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

நவீன் திசாநாயக்க
பொது முகாமைத்துவ கட்டமைப்பு அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for நுவரெலியா
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 9, 1969 (1969-09-09) (அகவை 55)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

வாழ்க்கைக் குறிப்பு

45, எல்பிரட் ஹவுஸ் கார்ட்ன், கொழும்பு 03 இல் வசிக்கும் இவர் பௌத்தம்மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நவீன்_திசாநாயக்க&oldid=24621" இருந்து மீள்விக்கப்பட்டது