நற்றமிழ்ப் பாவலர் விருது
இந்தக் கட்டுரை கொண்டுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் அதிகமாக முதல்நிலை மூலங்களில் தங்கியுள்ளன.. (மார்ச் 2021) |
நற்றமிழ்ப் பாவலர் விருது என்பது தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கும் ஒரு விருது ஆகும். இவ்விருது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் வழியாக மரபுக்கவிதை, அல்லது புதுக்கவிதைப் படைப்புகளில் பிற மொழிக் கலப்பில்லாத தூய தமிழ்ச் சொற்களையும், புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தும், இரு கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 50,000/- வழங்கத் தமிழ்நாடு அரசாணை 2020 திசம்பர் 31 ஆம் நாள் வெளியிட்டது.[1]
நற்றமிழ்ப் பாவலர் விருதாளர்கள்
2020 ஆம் ஆண்டு [2], 2021 ஆம் ஆண்டு,[3] [4] மற்றும் 2022 ஆம் ஆண்டு [5] [6]மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான [7]விருது பெற்றவர்கள் பட்டியல்
ஆண்டு | மரபுக்கவிதை விருதாளர் |
ஆய்வுக்குரிய நூல் | புதுக்கவிதை விருதாளர் |
ஆய்வுக்குரிய நூல் |
---|---|---|---|---|
2020 | மறத்தமிழ்வேந்தன் | இளந்தமிழாற்றுப்படை | சந்திரா மனோகரன் | அசையும் இருள் |
2021 | கருவூர் கன்னல் | ----- | முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன் | ----- |
2022 | ப. எழில்வாணன் | ----- | ம. சுடர்த்தமிழ்ச்சோழன் | ----- |
2023 | அரிமாப் பாமகன் | ----- | கௌதமன் நீல்ராசு | ----- |
மேற்கோள்கள்
- ↑ தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு - பிடிஎப் கோப்பிலான தகவல்
- ↑ தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் விருது வழங்கலுக்கான அரசாணை (ப) எண்:33, நாள்:26-2-2021
- ↑ தமிழ் அகராதியியல் நாள் விழா: விருதுகள் வழங்கி கவுரவிப்பு (செய்தி)
- ↑ தமிழ் அகராதியியல் நாள் விழா: 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளர் விருது (தினமணி நாளிதழ் செய்தி)
- ↑ தமிழ்ப் பற்றாளா்கள் 38 பேருக்கு விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா் (தினமணி நாளிதழ் செய்தி)
- ↑ வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகள் - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார் (தினத்தந்தி நாளிதழ் செய்தி)
- ↑ தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 480, நாள்: 07-03-2024, தமிழ் வளர்ச்சித் துறை