நற்றங் கொற்றனார்

நற்றங் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது ஒரே ஒரு பாடல் நற்றிணை 136 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

பாடல் சொல்லும் செய்தி

தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.

தலைவன் தன் விருப்பப்படி நடந்துகொள்ளாமல் அவன் விருப்பப்படி பொருள் தேடச் சென்றது சரிதான் என்கிறாள்.

இதற்கு ஒர் உவமை

கொடிய பிணியால் வருந்துபவருக்கு மருத்துவன் பிணியாளி விரும்பிய உணவைத் தராமல் மருந்தைத் தருகிறான். தான் நினைக்கும் பத்திய உணவு தந்து வருத்துகிறான். அதுபோலவே தலைவன் பொருள் தேடும் பணியை மேற்கொண்டுள்ளான்.

"https://tamilar.wiki/index.php?title=நற்றங்_கொற்றனார்&oldid=12561" இருந்து மீள்விக்கப்பட்டது