நப்பசலையார்
நப்பசலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 243 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
இவர் பெண்பால் புலவர். இவரது மேனியில் மஞ்சள் நிறப் படிவுகள் காணப்பட்டமையால் போலும் இவர் பசலையார் எனப்பட்டார். இந்தப் பசலை நோய் அன்று. இவர் நல்லவர் என்பது பட இவரை நப்பசலையார் என மக்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
நற்றிணை 243 பாடல் சொல்லும் செய்தி
- திணை - பாலை
அறம் பெரிதா, பொருள் பெரிதா? தலைவி நினைக்கிறாள். தன்னைப் பேணுதல் தலைவனுக்கு அறம். ஆனால் தலைவன் தன்னை விட்டு விட்டுப் பொருள் தேடப் பிரிந்துவிட்டான். எனவே தலைவனுக்குப் பொருள்தான் பெரிது என எண்ணி ஆறுதல் அடைகிறாள்.