நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்

நன்னிலம் மதுவனேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 71ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் விருத்திராசுரனின் துன்புறுத்தல் தாங்காத தேவர்கள் தேனீக்களாக மாறியிருந்து வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

தேவாரம் பாடல் பெற்ற
நன்னிலத்துப் பெருங்கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°52′46″N 79°36′47″E / 10.879445°N 79.613185°E / 10.879445; 79.613185
பெயர்
புராண பெயர்(கள்):மதுவனம், தேவாரண்யம், சுந்தரவனம், பிருகத்புரம், நன்னிலம்
பெயர்:நன்னிலத்துப் பெருங்கோயில்
அமைவிடம்
ஊர்:நன்னிலம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மதுவனேசுவரர், தேவாரண்யேசுவரர், பிரகாச நாதர்
தாயார்:மதுவனேசுவரி, தேவகாந்தார நாயகி, பெரிய நாயகி, பிரகாச நாயகி
தல விருட்சம்:வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம்
தீர்த்தம்:பிரம தீர்த்தம், சூல தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்

அமைவிடம்

சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அமைப்பு

வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. அதில் விநாயகர் உள்ளார். அடுத்து பலிபீடம் உள்ளது. அடுத்தடுத்து பிரம்மபுரீஸ்வரர் சன்னதியும், அகஸ்தீஸ்வரர் சன்னதியும் உள்ளன. திருச்சுற்றில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், மதுவனநாயகி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து பைரவர், சூரியன், சனீஸ்வரன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் படிகளில் ஏறி மேலே செல்லும்போது உயர்ந்த தளத்தில் உள்ள கருவறையில் மூலவர் மதுவனேஸ்வரர் உள்ளார். அவருக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராஜர் சன்னதியும் உள்ளன. சர்வதாரி வருடம் ஆவணி 29 (செப்டம்பர் 14, 2008) இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.

வழிபட்டோர்

அகத்தியர் வழிபட்ட தலம். குபேரன், இந்திரன், யமன், வருணன் ஆகியோர் முறையே வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு முதலான திசைகளில் வழிபட்ட திருத்தலமிது.[1]

புகைப்படங்கள்

இவற்றையும் பார்க்க