நன்செய் இடையாறு எயிலிநாதர் கோயில்

எயிலிநாதர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் [நன்செய் இடையாறு]] என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

எயிலிநாதர் கோயில், பரமத்திவேலூர் நன்செய் இடையாறு
பெயர்
பெயர்:எயிலிநாதர் கோயில், பரமத்திவேலூர் நன்செய் இடையாறு
அமைவிடம்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:எயிலிநாதர், திருவேலிநாதர்
தாயார்:சுந்தரவல்லி

அமைவிடம்

காவிரி ஆறுக்கும், திருமணிமுத்தாறுக்கும் இடையில் அமைந்துள்ள செழிப்பான ஊர் என்பதால் "நன்செய் இடையாறு' என்று இவ்வூர் பெயர் பெற்றுள்ளது. [1]

காலம்

இந்தக் கோயில் கி.பி.10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1]

மூலவர்

மூலவர் சுயம்புவாக உள்ளார். அவர் எயிலிநாதர் என்றும் திருவேலிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி சுந்தரவல்லி ஆவார். [1]

தல வரலாறு

பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் இங்கு உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர் யாருமில்லை என சொல்லித்திரிந்தான். நல்லவன் ஆயினும், ஆணவம் அவனது புகழை குறைத்தது.

அவனுக்கு புத்தி புகட்ட சிவன் மனித உடலும், மிருக தலையும் கொண்ட புருஷாமிருகத்தை ஏவினார். அதன் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி, சிவனின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான்.

சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின்கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சேலம் சுகவனேசுவர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர், பரமத்திபீமேஸ்வரர், நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் ஆகிய கோயில்களைக் கட்டி சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். அவற்றில் இக்கோயிலும் ஒன்றாகும். [1]

பிற சன்னதிகள்

இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், சுப்ரமணியராக ஆறுமுகம் கொண்டு வள்ளி தெய்வானையுடன் துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சனி பகவான், பைரவர் மற்றும் காரிய சித்தி ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்களும் தனித்தனி சன்னதியில் உள்ளனர். இங்கு ஆழ்வார்களும் உள்ளனர்.

தல மரம் வன்னி மரம் ஆகும். ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதியில் தேவிகளுடன் காட்சியளிக்கின்றார்.இவ்வூரை சுற்றி பெரும் தெய்வ கோயில்கள் சிறு தெய்வ கோயில்கள் அமைந்துள்ளன.[2]

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க