நந்திவர்மன் (திரைப்படம்)
நந்தி வர்மன் (Nandhi Varman) என்பது 2023ஆம் ஆண்டு இந்தியத் தமிழில் வெளிவந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட பரபரப்பூட்டும் புதிர் திரைப்படமாகும். இப்படத்தை ஜி. வி. பெருமாள் வரதன் எழுதி இயக்கியிருந்தார். இதில் சுரேஷ் இரவி, ஆஷா வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ. கே. பிலிம் பேக்டரி என்ற பெயரில் அருண் குமார் தனசேகர் இப்படத்தை தயாரித்தார்.[1] ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்த இப்படத்திற்கு ஆர். வி. சியோன் முத்து ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் 2023 திசம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது.
நந்திவர்மன் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஜி.வி. பெருமாள்வரதன் |
தயாரிப்பு | அருண்குமார் தனசேகர் |
கதை | ஜி.வி. பெருமாள்வரதன் |
இசை | Jerard Felix |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். வி. சியோன் முத்து |
படத்தொகுப்பு | சான் லோகேஷ் |
கலையகம் | ஏ. கே. பிஃலிம் பேஃக்டரி |
வெளியீடு | 29 திசம்பர் 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- குரு வர்மனாக சுரேஷ் இரவி
- இலக்கியாவாக ஆஷா வெங்கடேஷ்
- போஸ் வெங்கடாசலமாக போஸ் வெங்கட்
- சக்கரவர்த்தியாக நிழல்கள் இரவி
- தர்மராஜாக கஜராஜ்
- பழனிவேல் இராயனாக மீசை இராஜேந்திரன்
- ஜே. சி. பி. மணியாக ஆடுகளம் முருகதாஸ்
- டிரவுசராக அம்பானி சங்கர்
- கோதண்டமாக கோதண்டம்
- எஸ். வி. பசுபதியாக ஜெயம் எஸ். கே. கோபி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்திருந்தார்.
- அடியே அடியே-பிரதீப் குமார், பத்மஜா சீனிவாசன்
- ஈசனே-அந்தோனி தாசன்
வரவேற்பு
டைம்சு நவின் விமர்சகர் ஒருவர் ஐந்தில் மூன்று நட்சத்திரங்களை வழங்கியதுடன், "வளிமண்டல கதைசொல்லலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளாலும் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இத்திரைப்படம் பார்ப்பதற்கு மதிப்புள்ளது" என்று குறிப்பிட்டார்.[2]டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சகர் 2.5/5 நட்சத்திரங்களை கொடுத்து, "உலகைக் கட்டியெழுப்புவது பாராட்டத்தக்கது என்பதால் நந்திவர்மன் உங்களுக்கான படம்" என்று கூறினார்.[3]
மேற்கோள்கள்
- ↑ Durai, J.. "' நந்திவர்மன்' படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் - நாயகன் சுரேஷ் ரவி நம்பிக்கை!" (in ta) இம் மூலத்தில் இருந்து 2024-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240101185044/https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nandivarman-movie-hero-suresh-ravi-interview-123123000031_1.html.
- ↑ "Nandhi Varman Movie Review: Suresh Ravi, Asha Gowda Film Is A Journey Through Time And Supernatural" (in en). 2023-12-28 இம் மூலத்தில் இருந்து 2023-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231230194800/https://www.timesnownews.com/entertainment-news/reviews/tamil/nandhi-varman-movie-review-suresh-ravi-asha-gowda-film-is-a-journey-through-time-and-supernatural-review-106362561.
- ↑ "Nandhi Varman Movie Review : Perumal Varadhan's film is for those who enjoy the experience more than the payoff". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257 இம் மூலத்தில் இருந்து 2024-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240101050150/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/nandhi-varman/movie-review/106343497.cms.