நட்பே துணை
நட்பே துணை (Natpe Thunai) என்பது ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநரான பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஸ்ரீகாந்த் வாஸ்ரப் மற்றும் தேவேஸ் ஜெயச்சந்திரன் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை சுந்தர் சி மற்றும் குஷ்பு தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். பென்னி ஆலிவர் படத்தொகுப்பினைச் செய்துள்ளார்.
நட்பே துணை | |
---|---|
இயக்கம் | டி. பார்த்திபன் தேசிங்கு |
தயாரிப்பு | சுந்தர் சி குஷ்பு |
கதை | ஸ்ரீகாந்த் வாஸ்ரப் தேவேஸ் ஜெயச்சந்திரன் |
இசை | கிப்கொப் தமிழா ஆதி |
நடிப்பு | ஹிப்ஹாப் தமிழா ஆதி அனகா கரு பழனியப்பன் ஆர் ஜே விக்னேஷ்காந்த் |
ஒளிப்பதிவு | அரவிந்த் சிங் |
படத்தொகுப்பு | பென்னி ஆலிவர் |
கலையகம் | அவினி சினிமேக்ஸ் (அவ்னி மூவீஸ்) |
வெளியீடு | ஏப்ரல் 4, 2019 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ளார். அனகா, ஷா ரா, கரு. பழனியப்பன், பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் திரைக்கு வந்துள்ளது.
நடிப்பு
- பிரபாகரனாக ஹிப்ஹாப் தமிழா ஆதி
- அனகா
- அமைச்சர் அரிச்சந்திரனாக கரு பழனியப்பன்
- கெளசல்யா
- ஆர். ஜே. விக்னேஷ்காந்த்
- பாண்டியராஜன்
- ஹரிஷ் உத்தமன்
- 'எரும சாணி' விஜய்
- அஜய் கோஷ்
- வினோத் குமார்
- குகன் பிரகாஷ்
- சுட்டி அரவிந்த்
- 'புட் சட்னி' ராஜ் மோகன்
- 'பழைய ஜோக்' தங்கதுரை
- 'டெம்பிள் மங்கீஸ்' ஷா ரா
- அஷ்வின் ஜெரோம்
கதைக்களம்
ஹாக்கி விளையாட்டினை மையமான வைத்து கதை சொல்லப்பட்டிருக்கிறது. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட மருந்து நிறுவனத்தை இந்தியாவில் தொடங்க அரசியல்வாதியாக வரும் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார். அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் தங்களது நிறுவனத்திற்கு ஹாக்கி மைதானத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பயிற்சியாளராக இருக்கும் ஹரிஷ் உத்தமன் அந்த மைதானம் தங்கள் கையை விட்டுப் போய் விடக்கூடாது என நினைக்கிறார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றால் அந்த மைதானத்தைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ளலாம் என்பதால் அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற பயிற்சியாளர் முயற்சிக்கிறார். கதாநாயகன் ஆதியிடம் ஹாக்கி விளையாட்டில் உள்ள திறமையை தேசிய அளவிலான போட்டியில் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆதி முதலில் இதற்கு மறுக்கிறார். கரு பழனியப்பன் மருந்து நிறுவனத்திற்காக மைதானத்தை கையகப்படுத்தினாரா? பயிற்சியாளரும், ஹாக்கி விளையாட்டு வீரர்களும் தங்கள் வெற்றியால் மைதானத்தைத் தக்க வைத்துக் கொண்டனரா? என்பதை திரைக்கதை சொல்கிறது.[2]
இசை மற்றும் பாடல்கள்
இத்திரைப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஹிப்ஹாப் தமிழா ஆதி செய்துள்ளார்.
பாடல்கள் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கேரளா பாடல்" | ஹிப்ஹாப் தமிழா | 3:57 | |||||||
2. | "சிங்கிள் பசங்க" | கா கா பாலசந்தர், கானா உலகம் தாரணி, அறிவு | 3:44 | |||||||
3. | "ஆத்தாடி" | ஹிப்ஹாப் தமிழா மற்றும் வி.எம். மகாலிங்கம் | 3:27 | |||||||
4. | "பள்ளிக்கூடம்" | சஞ்சித் எக்டே | 3:04 | |||||||
5. | "வீதிக்கோர் ஜாதி" | ஹிப்ஹாப் தமிழா, அறிவு, சொல்லிசை செல்வந்தர் மற்றும் சஞ்சித் எக்டே | 2:41 | |||||||
6. | "முரட்டு சிங்கிள்" | சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா | 3:06 | |||||||
7. | "வேங்கமவன்" | ஹிப்ஹாப் தமிழா மற்றும் சின்னப்பொண்ணு | 3:37 | |||||||
8. | "மதம் மதம்" | ஹிப்ஹாப் தமிழா | 4:19 | |||||||
மொத்த நீளம்: |
27:55 |
மேற்கோள்கள்
- ↑ "நட்பே துணை". Tamil filmbeat. https://tamil.filmibeat.com/movies/natpe-thunai.html. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2019.
- ↑ "நட்பே துணை". மாலை மலர். 4 ஏப்ரல் 2019. https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/04/04203128/1235681/Natpe-Thunai-Movie-Review-in-Tamil.vpf. பார்த்த நாள்: 4 ஏப்ரல் 2019.