நகராட்சி

நகராட்சி (Municipality) ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். [1] இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சி அவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.

நகராட்சி ஓர் ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான நாடுகளில் நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" [2] என (பிரெஞ்சு: commune, இத்தாலியம்: comune, ரோமானியம்: comună, சுவீடியம்: kommun மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: kommune) அழைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில், முக்கியமாக மத்தியகிழக்கு நாடுகளில், நகராட்சி என்பது மற்ற நாடுகளில் நகர மண்டபம் (டவுண் ஹால்/சிடி ஹால்) என்றழைக்கப்படும் நகராட்சியின் நிர்வாக கட்டிடத்தையும் குறிக்கிறது.

கனடா, கிரீன்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் நாடுகளில் மிகப்பெரிய நகராட்சிகளைக் காணலாம்.

கீழ்நிலை ஆட்சி அமைப்புகளாக நகராட்சிகள்

அல்பேனியா

நகராட்சி என்பது ஒரு நகரின் (பாஷ்கி) அல்லது ஒரு மாநிலத்தின் (komunë) நிர்வாக அமைப்பு.

அல்ஜீரியா

நகராட்சி (கொம்யூன்) டாராவின் பகுதியை உள்ளடைக்கிய விலயா; இங்கு 1,541 கொம்யூன்கள் உள்ளன.

அர்ச்சென்டினா

நகராட்சி (முனிசிபலிடாட்) என்பது ஒரு நகரம், ஊர் அல்லது ஒரு நகர்ப்பகுதியை குறிக்கும். அவை அமைந்திருக்கும் மாநிலங்கள் தங்கள் கீழ் உள்ள நகராட்சிகளை அவற்றின் ஆட்சியைப் பொறுத்து சீரமைத்துக் கொளகின்றன.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின் உப-பிரிவுகள் நகராட்சிகளாகும். (பார்க்க ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகள்).

ஆஸ்திரியா

நகராட்சி (Gemeinde) ஒரு மாவட்டத்தின் (Bezirk) பங்காகும். மாவட்டம் ஒரு மாநிலத்தின் (Bundesland) பங்காகும்.

பங்களாதேசம்

நகராட்சி (Paurashava) ஒரு உபசில்லா அல்லது துணைமாவட்டத்தின் பாகமாகும், துணைமாவட்டம் மாவட்டம் ஒன்றின் பங்காகும்.

பெல்ஜியம்

நகராட்சி (gemeente/commune) ஒரு provincie/province-இன் பங்காகும் அல்லது பிரசெல்சு-இன் பங்காகும்.

பொலிவியா

நகராட்சி (municipio) ஒரு மாநிலத்தின் பங்காகும், மாநிலம் நாட்டின் ஒரு துணை கோட்டமாகும் departamento.

பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவும்

இங்கு நகராட்சி (ஒப்சினா - općina or opština) கன்ட்டனின் ஒரு பகுதி (kanton) மற்றும் ஒரு துணைமண்டலம் (grouped in regions)

பிரேசில்

மாநிலங்கள் (estado) நகராட்சி (município)களாக பிரிக்கப்படுகின்றன. இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை. நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல், நிர்வாகப் பிரிவாகும். cidade/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது. இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி (பிரேசிலியா) சிறப்பு நிலையில் கூட்டமைப்பு மாவட்டமாக நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும். இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், அமேசான் பகுதி போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.[3]

பல்கேரியா

நகராட்சி (Bulgarian: община) நாட்டின் மிகச் சிறிய ஆட்சிப்பகுதியாகும் மற்றும் மாநிலத்தின் ஒரு பாகமாகும். பல்கேரியாவின் 28 மாநிலங்களில் 264 நகராட்சிகள் உள்ளன.

கனடா

கனடாவில் நகராட்சி ஒரு நகரம், ஊர், கிராமம், குடியிருப்பு அல்லது பரோவைக் குறிக்கும் ஒரு மண்டலம் (அல்லது மண்டல நகராட்சி) என்பது மாவட்டம், கௌன்டி அல்லது மாநகரம். தவிர குயூபெக், நோவாஸ்கோஷியா மற்றும் ஒன்டோரியோ மாநிலங்களில் சில குறிப்பிட்ட நகராட்சிகளுக்கு தனி பெயர் உண்டு. ஒன்டோரியோ, சாஸ்கட்சேவான் மற்றும் மனிடோபாவின் சில பகுதிகள் கிராம நகராட்சிகள் என அழைக்கப்படுகின்றன, அதே நேரம் அல்பெர்டாவின் பகுதிகள் நகராட்சி மாவட்டம் எனவும் பிரித்தானிய கொலம்பியா பகுதிகள் மாவட்ட நகராட்சிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

சிலி

நகராட்சி (municipalidad) நாட்டின் மூன்றாம்நிலை சட்ட அமைப்பாகும்; அவை ஒன்றோ பலவோ கொம்யூன்களை (comuna) நிர்வகிக்கின்றன. முதல்நிலையில் சிலி மண்டலங்களாகவும் (மண்டலங்கள்) இரண்டாம் நிலையில் மாநிலங்களாகவும் (மாநிலங்கள் -provincia) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் comunas ஆக பிரிக்கப்பட்டு நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நகராட்சியும் கொம்யூனும் ஒரே பெயரில் அமைந்திருந்தாலும் அரசியலமைப்பு ஒரு நகராட்சி ஒன்றிற்கு மேற்பட்ட கொம்யூன்களுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கிறது. [4]

கொலம்பியா

நகராட்சி (municipio) ஒரு டிபார்ட்மென்டின் (departamento) பாகமாகும். மேலும் இவை காரிஜிமென்டோக்கள் மற்றும் வெரெடாக்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.

குரோசியா

இங்கு நகராட்சி (ஒப்சினா-općina) கௌன்டி (Counties of Croatia|županija) எனப்படும் நிலப்பிரிவின் பகுதியாகும்.

செக் குடியரசு

நகராட்சி (obec) ஒரு kraj (க்ராஜ்)-இன் பாகமாகும்.

டென்மார்க்

கொம்யூன் எனப்படும் நகராட்சி (kommune) ஒரு மண்டலத்தின் மண்டலம் பாகமாகும் . சனவரி 1, 2007-இலிருந்து டென்மார்க்கில் கௌன்டிகள் விடப்பட்டன.

டொமினிகன் குடியரசு

நகராட்சி (municipio) ஒரு மாநிலத்தின் பாகமாகும்.

எஸ்தோனியா

நகராட்சி (omavalitsus]]) ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும்.

பின்லாந்து

நகராட்சி (kunta / kommun - கொம்யூன்) தனது அருகாமையிலுள்ள நகராட்சிகளுடன் ஒரு துணைமண்டலத்தில் (seutukunta / region) மற்றும் மண்டலத்தில் (region – maakunta / landskap) ஒத்திசைந்துள்ளன; மண்டலங்கள் நாட்டின் மாநிலத்துடன் (lääni / län) இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள் தங்களை "நகரம்" (kaupunki / stad) என அழைத்துக்கொள்ளலாம்.

பிரான்ஸ்

மண்டலங்கள் (région) மாநிலங்களாகவும் (département), மாநிலங்கள் நகராட்சி (commune)களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி

நகராட்சி (Gemeinde) ஒரு மாவட்டத்தின் (Kreis) பாகமாகும். பெரும் நகராட்சிகள் Stadt என அழைக்கப்படுகின்றன. மக்கட்தொகை குறைந்த இடங்களில் நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு நகராட்சி ஒன்றியம் (Verbandsgemeinde) என அழைக்கப்படுகின்றன.

கிரீஸ்

நகராட்சி ஒரு பிரிபெக்ட்சரின் (prefecture) பாகமாகும். அவை டிமொய் அல்லது (மக்கட்தொகை குறைந்திருந்தால்) கொய்நோட்டே என அழைக்கப்படுகின்றன. இவை சேர்ந்து நோமோஸ் (nomos) எனவும் நோமோஸ்கள் இணைந்து பெருமண்டலமாக (periphery)வும் அழைக்கப்படுகின்றன. நகராட்சிகள் மூன்றாம்நிலை நிர்வாக அமைப்புகள். டமொய் மேயர் மற்றும் கொய்நோட்டே தலைவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஹைத்தி

நகராட்சி (commune) ஒரு டிபார்ட்மென்ட்டில் (département) உள்ளடங்கிய அர்ரொன்டிஸ்மென்ட்டின் (arrondissement)) பாகமாகும்.

ஹங்கேரி

நகராட்சி (települési önkormányzat) ஒரு கௌன்ட்டி (megye)யின் பாகமாகும்.

ஐஸ்லாந்து

நகராட்சி ஒரு நகர சட்டமன்றம். அது 300-இலிருந்து 18,000 மக்கள் கொண்ட கிராமமாகவும் இருக்கலாம். (பார்க்க ஐஸ்லாந்து நகராட்சிகள்)

இந்தியா

நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராமமுமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000-இற்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000-ஐ மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ. 6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ. 4 கோடிக்கு மேல், ரூ. 6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ. 4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ஆம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இத்தாலி

ஒரு மண்டலத்தின் (regione) பாகமாக மாநிலமும் (provincia) மாநிலத்தின் பாகமாக கொம்யூனும் (comune) விளங்குகின்றன. நகராட்சி பெரிய கொம்யூன்களின் துணைபிரிவுகளாக உள்ளன. (எ-டு: உரோமை நகரம் கொம்யூன்).

யப்பான்

நகராட்சி நாட்டின் உபபிரிவுகளான பிரிபெக்ட்சரின் (prefecture) ஆட்சியைக் குறிப்பதாகும்.

கென்யா

நான்கு வகையான உள்ளூராட்சிகளில் நகராட்சி ஒன்றாகும். சுமார் 50 முக்கிய நகரங்களுக்கு நகராட்சி நிலை அளிக்கப்பட்டுள்ளது.

லாத்வியா

நகராட்சி (sing.:novads, plur.:novadi) ஒரு மாவட்டத்தின் (sing.:rajons, plur.:rajoni) பகுதியாகும்.

லெபனான்

நகராட்சி ஒரு மாவட்டத்தின் district பகுதியாகும். மாவட்டம் ஒரு மாநிலம் அல்லது மண்டலத்தின் (Region or Province, அரபு மொழி: Mouhafazah) பகுதியாகும்.

லித்துவேனியா

நகராட்சி (savivaldybė) ஒரு மாவட்ட (apskritis)த்தின் பங்காகும். இது மேலும் எல்டெரேட்கள் (elderates seniūnija) என பிரிக்கப்படுகின்றன.

லக்சம்பர்க்

கொம்யூன்கள் communes கடைநிலை பிரிவுகளாகும்.

மெக்சிகோ

ஒரு நகராட்சி (municipio) மாநிலத்தின் பிரிவாகும் (estado) மற்றும் ஒரு பரோ (delegación) மாவட்டத்தின் Federal District பிரிவாகும். (பார்க்க மெக்சிகோ நகராட்சிகள் மற்றும் மெக்சிகோ மாவட்ட ஒன்றிய பரோக்கள்).

நெதர்லாந்து

நகராட்சி (gemeente) மாநிலத்தின் (provincie) பகுதியாகும்.

நியூசிலாந்து

நியூசிலாந்து நிலப்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் ஒரு "நகரம்" (பெரும்பான்மை நகர்ப்புறம்) அல்லது "மாவட்டம்" (பெரும்பான்மை கிராமப்புறம்) ஆகியவற்றின் பகுதியாகும். ஒவ்வொன்றும் மக்கள் தொகை 5,000 முதல் 400,000 வரையுள்ள மக்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் மற்றும் பல சிறிய "சமூக வாரிய" பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அந்த கவுன்சிலின் மேல் "பிராந்தியங்கள்" எனப்படும் நிருவாகப் பிரிவுகள் உள்ளன, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்கள் காற்று மற்றும் நீர் தூய்மை மற்றும் பிராந்திய பொது போக்குவரத்து போன்ற திட்டங்களைச் செயல்படுத்த அக்கறை கொண்டுள்ளன. பெரும்பாலான பிராந்தியங்கள் 3-10 மாவட்டங்கள் மற்றும்/அல்லது நகரங்களை உள்ளடக்கியது. "நகராட்சி" என்ற சொல் நியூசிலாந்தில் 1979 ஆம் ஆண்டு முதல் அரிதாகிவிட்டது மேலும் அந்த சொல்லிற்கு சட்ட அந்தஸ்தும் இல்லை.

நிக்கராகுவா

நகராட்சி (municipio) என்பது ஒரு துறையாகவோ (departamento) அல்லது அந்நாட்டின் வடக்கு அட்லாண்டிக் தன்னாட்சிப் பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டிக் தன்னாட்சிப் பகுதி எனப்படும் இரண்டு தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்றாகவோ இருக்கலாம்.

நார்வே

நகராட்சி (kommune) ஒரு கௌன்ட்டி (fylke)யின் பகுதியாகும். நார்வேயில் 431 நகராட்சிகள் உள்ளன (2006).

பாலத்தீன தேசிய ஆணையம்

நகராட்சிகள் 4,000 மக்கட்தொகையை கொண்டவையும் 13-15 அவை உறுப்பினர்களைக் கொண்டவையுமாகும். பாலத்தீன தேசிய ஆணையத்தில் 105 நகராட்சிகள் உள்ளன.

பராகுவே

இங்கு நகராட்சி (முனிசிபாலிடாட்) நாட்டின் உட்பிரிவான டிபார்ட்மென்டின் பகுதியாகும் (departamento).

பெரு

ஒரு நகராட்சி (municipio) என்பது பெரு மாவட்டங்கள் (distrito) என்பதன் மற்றொரு சொல்லாக கருதப்படுகிறது. மேலும் இது கீழ்மட்ட நிர்வாக துணைப்பிரிவாகும். இது பெரு மாகாணங்கள் (provincia), மற்றும் துறை (departamento) இன் ஒரு பகுதியாக கருதப்படும். 2002 ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்துறை இப்போது பிராந்தியம் (provincia) என்று அழைக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ்

A municipality (bayan) is a town with a popularly elected administration including a mayor, and is part of a province (lalawigan)—except for the independent municipality of Pateros, Metro Manila in the National Capital Region—and is composed of barangays.

போலந்து

நகராட்சி (gmina) ஒரு கௌன்ட்டி (powiat)யின் பகுதியாகும்.

போர்த்துகல்

A நகராட்சி (município) is a directly elected local area authority generally consisting of a main city and surrounding villages, with wide-ranging local administration powers. It is also a subdivision of a district for central government purposes (distritos).

பியூட்டோரிக்கோ

நகராட்சி (municipio) இங்கு ஒரு ஊர் அல்லது நகரை, மேயர் உள்ளிட்ட தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகத்துடன், குறிக்கிறது.

உருமேனியா

நகராட்சி (municipiu) சட்டத்தினால் வரிசையிடப்பட்ட ஊர் அல்லது நகரமாகும். ஒரு யூடெட்டின் மிகச்சிறிய துணைக்கோட்டம் கொம்யூன் எனப்படுகின்றன.

உருசியா

பலவகையான நகராட்சி அமைப்புகள் உள்ளன. பார்க்க உருசிய துணைக்கோட்டங்கள்#நகராட்சி பிரிவுகள்

சான் மரீனோ

எட்டு சிறு நகராட்சிகள், காஸ்டெல்லி (castelli) உள்ளன.

செர்பியா

நகராட்சி (opština) ஒரு கௌன்ட்டியின் (okrug) பகுதியாகும்.

சிலோவாக்கியா

நகராட்சி (obec) ஒரு மாவட்டத்தின் (okres) பகுதியாகும். நாட்டில் 2,891 நகராட்சிகள் உள்ளன.

தென் ஆப்பிரிக்கா

District municipalities and metropolitan municipalities are subdivisions of the provinces, and local municipalities are subdivisions of district municipalities.

ஸ்வீடன்

நகராட்சி (kommun) ஒரு கௌன்ட்டியின் (län) பகுதியாகும்.

ஸ்விட்சர்லாந்து

நகராட்சி (commune/Gemeinde/comune) ஒரு கன்டனின் (canton/Kanton/cantone) பகுதி மற்றும் கன்டனின் சட்டங்களுக்கு உட்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம்

நகராட்சி அமீரகத்தின் பங்காகும். ஒவ்வொரு அமீரகமும் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

ஐக்கிய இராச்சியம்

இங்கு நகராட்சி என்ற சொல் பொதுவாக பயன்படுத்துவதில்லை, மற்ற நாடுகளில் நகராட்சி எனக் குறிப்பிடும் ஆட்சியமைப்பிற்கு இணையாக, (சரிசமமாக இல்லை) இடத்திற்கேற்றவாறு குடிகள் பாரிஷ், ஊர், நகரம், பரோ, மாவட்டம், மற்றும் யூனிடரி ஆணையம் குறிக்கும். முனிசிபல் என்ற சொல் ஊர் அல்லது நகரத்தின் ஆட்சியைக் குறிக்கும்.

ஐக்கிய அமெரிக்கா

The entities that have status as a municipality vary from state to state. Cities, towns, boroughs, or villages are common terms for municipalities. Townships, counties, and parishes are not generally considered to be municipalities, although there are exceptions. In some states, towns have a non-municipal status similar to townships. Likewise, some townships have full municipal status.

வெனிசூலா

நகராட்சி (municipio) மாநிலத்தின் பாகமாகும், மற்றும் தலைநகரின் Capital District உபபிரிவாகும்.

முதல்நிலை அமைப்புகள் மற்றும் பிற நகராட்சி வகைகள்

மக்கள் சீனக் குடியரசு

A direct-controlled municipality (直辖市 in பின்யின்: zhíxiáshì) is a மாநகரம் with equal status to a province: Beijing, Tianjin, Shanghai, and Chongqing (see Municipality of China)

சீன குடியரசு தைவான்

A நகராட்சி (直轄市 in Wade-Giles: chi-hsia-shih) is a நகரம் with equal status to a province: தாய்பெய் and Kaohsiung. (see Municipality of China)

ஜெர்சி

A நகராட்சி refers to the honorary officials elected to run each of the 12 Parishes into which it is subdivided. This is the highest level of regional government in this jurisdiction.

வடக்கு மக்கெதோனியா

84 நகராட்சிகள் (opštini; singular: opština) were established in 2004, reduced from 123 created in 1996.

போர்த்துக்கல்

A நகராட்சி (município/concelho) is the primary local administrative unit. Although it is a part of a மாவட்டம் (distrito) for certain national administrative purposes, the நகராட்சி is not subordinate to the மாவட்டம் and decentralization is doing away with the மாவட்டங்கள். A நகராட்சி contains one or more freguesias.

பியூட்டோரிக்கோ

இங்கு முதல்நிலைக் கோட்டங்கள் இல்லை. நகராட்சிகள் இரண்டாம்நிலையில் இருந்தாலும் முதல்நிலை நிர்வாக கோட்டங்களாக இருக்கின்றன.

மொன்டெனெக்ரோ

நகராட்சி (opština) மிகப்பெரிய மண்டலப் பிரிவாகும்.

லிப்யாவின் நகராட்சிகள்

சில மிகப் பெரியன.

சிலவேனியா

நகராட்சி (občina) ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். மொத்தம் உள்ள 210 இல் 11 தனி "ஊரக" நிலையும் தன்னாட்சியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின்

நகராட்சி (municipio) ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின் (provincia) பாகமாகும். கலிசியா மண்டலத்தில் இவை கன்செல்லோ (concello) எனவும், (Principality of Asturias) மண்டலத்தில் கன்சேயூ (conceyu) எனவும் அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. "Municipality".. 
  2. "municipality definition". Yourdictionary.com.
  3. "Constituição da república federativa do brasil de 1988". www.planalto.gov.br. பார்க்கப்பட்ட நாள் 2022-09-18.
  4. "Santiago de Chile – Comunas". Mapas de Chile, Castor y Polux Ltda. Archived from the original on 20 September 2019. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011.

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/index.php?title=நகராட்சி&oldid=129440" இருந்து மீள்விக்கப்பட்டது