நகரத்தார் கலைக்களஞ்சியம்
நகரத்தார் கலைக்களஞ்சியம் என்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினைப் பற்றிய கலைக்களஞ்சியமாகும். இதனை மெய்யப்பன் தமிழ் ஆய்வகம் வெளியீட்டில் முனைவர் ச. மெய்யப்பன் 1998 ஆம் ஆண்டு பதிப்பித்தார். இணையாசிரியர்களாக கரு. முத்தய்யாவும் சபா. அருணாசலமும் இருந்துள்ளனர்.[1] 454 பக்கங்கள் கொண்ட இந்நூலில் மொத்தம் 551 தலைப்புகள் உள்ளன. இச்சமூகத்தில் உள்ள பெருமக்கள், ஊர்கள், பண்பாடும் வரலாறும், நிறுவனங்கள், நினைவுச் சின்னங்கள், இதழ்கள் முதலிய பிரிவுகளில் கட்டுரைகள் உள்ளன.
2002 ஆம் ஆண்டுப் பதிப்பு | |
நூலாசிரியர் | ச. மெய்யப்பன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | களஞ்சியம் |
வெளியீட்டாளர் | மெய்யப்பன் தமிழாய்வகம் |
பக்கங்கள் | 454 பக்கங்கள் |
மேற்கோள்கள்
- ↑ நகரத்தார் கலைக்களஞ்சியம். பின்னட்டை: மெய்யப்பன் தமிழாய்வகம்.