த. நா. சேனாபதி

தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி என்னும் த. நா. சேனாபதி (T. N. Senapati) வங்காள மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர்.

த. நா. சேனாபதி
த. நா. சேனாபதி
இயற்பெயர்/
அறியும் பெயர்
த. நா. சேனாபதி

பிறப்பும் குடும்பமும்

த. நா. சேனாபதி, தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த. நா. குமாரசாமி இவர்தம் தம்பி ஆவார்.

கல்வி

இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கலை இளவர் (பி.ஏ.) பட்டம் பெற்றார். சமசுகிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று அவற்றில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார்.

எழுத்துப் பணி

த. நா. சேனாபதி இளம்பருவத்திலே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டார். கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் ஆகியவை உள்ளிட்ட இதழ்களில் கதைகள் எழுதினார். வங்காளத்தில் தங்கி, வங்காள மொழியை முழுவதுமாக கற்றவர்.

இரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி போன்ற வங்க மொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தன் உடன்பிறப்பான த. நா. குமாரசாமியுடன் இணைந்து தமிழில் மொழிபெயர்த்தார். [1]

நூல்கள்

த. ந. சேனாபதி தமிழில் சொந்த நூல்களையும், வங்க மொழி நூல்களை தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார்.[2]

சொந்த நூல்கள்

  • குழந்தையின் மனம், தமிழ் புனைவு நூல், அல்ஹானா பதிப்பகம், 1948
  • விட்டலக் கதைகள், புனைவு, சென்னை அல்லயன்ஸ் பதிப்பகம், 1952,
  • குரு கோவிந்தர், வாழ்க்கை வரலாறு, சென்னை அல்லயன்ஸ் பதிப்பகம், 1954,
  • அமரஜோதி, காந்திஜி, வாழ்க்கை வரலாறு, சென்னை அல்லயன்ஸ் பதிப்பகம், 1949
  • கவியும் மொழியும், வங்கால கவிஞர்களீன் வாழ்க்கை வரலாறுகள், சென்னை அல்லயன்ஸ் பதிப்பகம், 1955
  • கவியின் கதை, வாழ்க்கை வரலாறு நூல், சாகித்திய அகாதமி வெளியிடு, 1961

மொழி பெயர்ப்பு நூல்கள்

இரவீந்திரநாத் தாகூரின் நூல்கள்

  • நாலு அத்தியாயம், புனைவு நூல், கலைமகள் காரியாலயம் பதிப்பகம், சென்னை
  • மபினி, புனைவு நூல், சென்னை அல்லயன்ஸ் பதிப்பகம், 1944
  • போஸ்ட் மாஸ்டர், புனைவு நூல், சென்னை அல்லயன்ஸ் பதிப்பகம், 1951
  • கவிதைகள், வரலாற்று நூல், கலைமகள் காரியாலயம், 1955
  • இளமைப் பருவம், வரலாற்று நூல், அல்லயன்ஸ் பதிப்பகம், 1950

சரத்சந்திரர் நூல்கள்

  • கமலா, புனைவு நூல், சென்னை அல்லயன்ஸ் பதிப்பகம், 1953

பிற எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு நூல்கள்

  • சுபோத் வாசுவின் புனைவு நூல், கட்டை பிரம்மச்சாரி, கலைமகள் காரியாலயம், 1956
  • ஏ. எஸ். பஞ்சாபகேச அய்யர் எழுதிய மகாவீரர், வாழ்க்கை வரலாறு நூல் 1955
  • பிபூதிபூஷனின் ஆரண்யக் எனும் வங்காளி நூலின் தமிழாக்கம் வனவாசி

இதனையும் காண்க

மேற்கோள்

"https://tamilar.wiki/index.php?title=த._நா._சேனாபதி&oldid=4354" இருந்து மீள்விக்கப்பட்டது