த. கனகசபை
த. கனகசபை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத்துறையில் களத் தலைவராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்."நாட்டுப்புறப் பாடல்களில் அழகியல் கட்டமைப்பு” என்ற நூலையும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். மைசூரிலிரிருந்து வெளியாகும் “மைசூர் முரசு” எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய “சங்கத் தமிழிசை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.