த. அஜந்தகுமார்

த. அஜந்தகுமார்

த.அஜந்தகுமார் ஈழத்தில் வளரந்து வரும் இளைய படைப்பாளிகளில் ஒருவர்.யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வதிரி எனும் ஊரில் பிறந்த இவர், கவிதை, சிறுகதை, விமர்சனம், இதழியல் ஆகிய துறைகளில் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறார்.

த. அஜந்தகுமார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
த. அஜந்தகுமார்
பிறந்ததிகதி 1984
பிறந்தஇடம் யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
கல்வி நெல்லியடி மத்திய கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்கள்
இணையதளம் இப்படி

வாழ்க்கைக் குறிப்பு

தருமராசா அஜந்தகுமார் க.பொ.த சா/உயர் தரத்தை நெல்லியடி மத்திய கல்லூரியிலும், பட்டப் படிப்பினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர்.

ஈழத்துச் சஞ்சிகைகளான கலைமுகம், ஞானம், புதிய தரிசனம், தாயகம், அம்பலம், நடுகை, ஜீவநதி, தெரிதல் மற்றும் பல சஞ்சிகைகளில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், வலம்புரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் எழுதிவருகிறார்.

வார்ப்பு, காற்றுவெளி, திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

இவை தவிர க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பாடநூல் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இவ்வகையில் தமிழ்ச் சிறுகதைகள், உரைநடைக்கோவை ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

இதழ் பங்களிப்பு

  • புதியதரிசனம் என்ற காலாண்டு கலை இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இலக்கியச் செயற்பாடு

  • 2010 - தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரை வாசித்தார்.
  • 2011- கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.
  • ஞானம் பரிசுக் கதைத் தொகுதிகளான கொக்கிளாய் மாமி, சிறைப்பட்டிருத்தல், கருமேகம் தாண்டிய நிலவு ஆகிய தொகுதிகளிலும் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடான பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள் ஆகிய தொகுதிகளில் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன
  • ஜீவநதி வெளியீடாக வெளிவந்த கவியில் உறவாடி... தொகுதியில் இவருடைய கவிதை வெளிவந்துள்ளது.

வெளிவந்த நூல்கள்

  • ஒரு சோம்பேறியின் கடல் (கவிதைகள், அம்பலம் வெளியீடு)
  • தனித்துத் தெரியும் திசை (ஆய்வு, புதிய தரிசனம் வெளியீடு)
  • அப்பாவின் சித்திரங்கள்
  • படைப்பின் கதவுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=த._அஜந்தகுமார்&oldid=2322" இருந்து மீள்விக்கப்பட்டது