தோமசு யேற்சு றைட்டு
கர்ணல் தோமசு யேற்சு றைட்டு (Thomas Yates Wright, 1869–1964) ஒரு பிரித்தானியப் பயிர்ச் செய்கையாளராவார். இவர் ஒரு கிரிக்கெட்டு வீரரும் இலங்கையின் சட்டவரைஞருமாக இருந்தார். தேயிலைப் பயிர்ச் செய்கையாளராக இருந்த இவர் இலங்கைச் சட்டவாக்கக் கழகத்திலும் இலங்கைச் செனட் சபையிலும் உறுப்பினராக இருந்தார்..[1]
இங்கிலாந்தில் இலங்கசயரில் பிறந்த றைட் 1889 ஆம் ஆண்டு ஒரு பயிர்ச் செய்கையாளராக இலங்கைக்குச் சென்றார். இவர் கிரிக்கெட்டு, றக்பி காற்பந்து, ஹொக்கி, குழிப்பந்து எனப் பல்வேறு விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினார். கிரிக்கெட்டு விளையாட்டில் மாத்தளை, கண்டி ஆகிய விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் 1893 முதல் 1919 வரையான காலப் பகுதியில் மலைநாட்டுப் பதினொருவர் கழகத்தில் விளையாடினார். இவர் 1890களில் பல்வேறு போட்டிகளில் அகில இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்தார்.[2] இவரே இலங்கை தடகள விளையாட்டுச் சங்கத்தின் நிறுவனத் தலைவராவார்.[3]
1920 முதல் 1925 வரை இலங்கைச் சட்டவாக்கக் கழக உறுப்பினராக இருந்த இவர், 1947 இல் இலங்கைச் செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார். மகாக்கந்தை பெருந்தோட்டம் இவருக்குரித்தாயிருந்தது. 1939 ஆம் ஆண்டு அத்தோட்டத்தில் இவர் கட்டியதே கல் மாளிகை எனப்படுகிறது. இவர் 1951 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட நூல் Ceylon in My Time, 1889-1949 (எனது காலத்தில் இலங்கை, 1889-1949) ஆகும்.[4]
உசாத்துணை
- ↑ "From LPs to cassettes - a trail of music" இம் மூலத்தில் இருந்து 2014-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141201055234/http://www.sundayobserver.lk/2011/03/27/fea40.asp.
- ↑ Obituaries in 1964
- ↑ "ATHLETIC ASSOCIATION OF SRI LANKA, THE LIST OF PRESIDENTS AND SECRETARIES (1922 - 2012)" இம் மூலத்தில் இருந்து 2013-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130722084936/http://www.srilankaathletics.com/H2%20Presidents%20Secretaries.html.
- ↑ மகாக்கந்தையிலுள்ள கல் மாளிகை
வெளி இணைப்புகள்
- கிரிக்கெட்டு ஆக்கைவில் தோமசு றைட்டு