தோமசு தங்கத்துரை வில்லியம்

மரு. தோமசு தங்கத்துரை வில்லியம் (Dr Thomas Thangathurai William, பிறப்பு: 13 பெப்ரவரி 1944) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்[1] ஆவார்.

தோமசு வில்லியம் தங்கத்துரை
Thomas Thangathurai William
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2010
முன்னையவர்கே. பத்மநாதன், ததேகூ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 13, 1944 (1944-02-13) (அகவை 80)
பாண்டிருப்பு, அம்பாறை மாவட்டம், இலங்கை
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பைச் சேர்ந்த தோமசு தங்கத்துரை சமூக சேவையாளர் ஆவார்.[2] இவர் இலங்கையின் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 9,029 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[3] ஆனாலும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் 2009 மே மாதத்தில் இறந்தததை அடுத்து வெற்றிடமான பதவிக்கு கட்சிப் பட்டியலில் இருந்து (இரண்டாவதாக வந்த அரியநாயகம் சந்திரநேரு ஏற்கனெவே இறந்தததினால்) தோமசு வில்லியம் 2009 சூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.[4]

2010 தேர்தலில் இவர் போட்டியிட்டாராயினும், 8,256 விருப்பு வாக்குகள் பெற்று கூட்டமைப்பு வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[5]

மேற்கோள்கள்

  1. "இலங்கை நாடாளுமன்றம்: William, Thomas Thangathurai". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/1591. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2015. 
  2. "நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை பதவி பிரமாணம்". தேசம்.நெட். 11 சூன் 2009. http://thesamnet.co.uk/?p=12792. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2015. 
  3. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf. 
  4. "New TNA MP for Ampaa'rai district sworn in". தமிழ்நெட். 12 June 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29583. பார்த்த நாள்: 20 சூன் 2009. 
  5. "General Election 2010 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513034732/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Digamadulla_pref_GE2010.pdf.