தொலைதூர ஏவுகணை

ஒரு தொலைதூர ஏவுகணை என்பது ஒரு வகை ஏவுகணை ஆகும். இது ஒரு இலக்கை நோக்கி வெடியுளையினைச் செலுத்த எறிகணை இயக்கத்தைப் பயன்படுத்துகிறது. குறுகிய தூர ஏவுகணைகள் பொதுவாக பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும். அதே சமயம் மிகப் பெரிய ஏவுகணைகள் வெளி-வளிமண்டலத்தில் இருக்கும். மிகப்பெரிய தொலைதூர ஏவுகணைகள் முழு சுற்றுப்பாதையில் பறக்கும் திறன் கொண்டவை. இந்த ஆயுதங்கள் சீர்வேக ஏவுகணைகளில் இருந்து வேறுபட்ட வகையைச் சேர்ந்தவை, அவை காற்றியக்கவியல் மூலம் இயக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வளிமண்டலத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வரலாறு

ஒரு நவீன, முன்னோடி தொலைதூர ஏவுகணை ஏ-4 ஆகும்.[1] இது 1930 கள் மற்றும் 1940 களில் வெர்னர் வான் பிரவுனின் வழிகாட்டுதலின் கீழ் நாட்சி ஜெர்மனியால் உருவாக்கப்பட்ட வி-2 என பொதுவாக அறியப்பட்டது. வி-2 இன் முதல் வெற்றிகரமான ஏவுதல் அக்டோபர் 3, 1942 இல் இடம்பெற்றது. செப்டம்பர் 6, 1944 இல் பாரிசுக்கு எதிராக அது செயல்படத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு லண்டன் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் மே 1945 இல் ஐரோப்பாவில் 3,000 இற்கும் மேற்பட்ட வி-2 கள் ஏவப்பட்டன.[2]

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. Zaloga, Steven (2003). V-2 Ballistic Missile 1942–52. Reading: Osprey Publishing. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84176-541-9. https://archive.org/details/newvanguard8200stev/page/3. 
  2. Clayton K. S. Chun (2006). Thunder Over the Horizon: From V-2 Rockets to Ballistic Missiles. Greenwood Publishing Group. பக். 54. 

உசாத்துணை

  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 5, Chemistry and Chemical Technology, Part 7, Military Technology; the Gunpowder Epic. Taipei: Caves Books.

மேலும் படிக்க

  • Bath, David W. Assured Destruction: Building the Ballistic Missile Culture of the U.S. Air Force (Naval Institute Press, 2020) online book review

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தொலைதூர_ஏவுகணை&oldid=29139" இருந்து மீள்விக்கப்பட்டது