தொண்டைமண்டல சதகம்
தொண்டைமண்டல சதகம் என்பது பொ.ஊ. 17-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் சிற்றிலக்கிய வகையாகும். இதன் ஆசிரியர் படிக்காசுப் புலவர் ஆவார்.[1] சீதக்காதி என்னும் இசுலாமிய வள்ளலின் அன்புக்கு உரியவராக விளங்கினார்.[2] இந்நூலின் ஆசிரியர் தொண்டை மண்டலத்தில் நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தொகுத்து எழுதிய நூல் இது.[3]
நூலாசிரியர் | படிக்காசுப் புலவர் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | இடைக்காலத் தமிழ் |
தொடர் | சதகம் |
பொருண்மை | தமிழ் சிற்றிலக்கியம் |
வகை | செய்யுள் |
அமைக்கப்பட்டது | பொ.ஊ. 17-ம் நூற்றாண்டு |
இவ்வாசிரியர் இயற்றிய மற்ற நூல்களாக தண்டலையார் சதகமும் கொங்கு மண்டல சதகமும் ஆகும்.
திருக்குறளின் உரையாசிரியர்களில் ஒருவரான பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பது இந்நூலிலிருந்து அறியப்படுகிறது.[4] இச்சதகத்தின் 41-வது செய்யுள் "திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் வள்ளுவர் நூற்கு வழிகாட்டினான்" என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம்.[4]
இவற்றையும் பார்க்கவும்
சான்றுகள்
மேற்கோள் தரவுகள்
- மு. வை. அரவிந்தன் (2018). உரையாசிரியர்கள் (8 ). சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
- முத்து இராமலிங்கம். படிக்காசுப் புலவரின் தொண்டை மண்டல சதகம் மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.
- "10. சதகம் முதலியன (கி. பி. 1700 - 1900)". Tamilvu.org. n.d.. http://www.tamilvu.org/ta/library-lA440-removed-as-copy-right-html-inserted-lA440220-241649.
- "Tamil Ilakiya Varalaru". Tamilvu.org. n.d.. http://www.tamilvu.org/ta/library-lA440-removed-as-copy-right-html-inserted-lA440222-241651.
உசாத்துணைகள்
- மு. வரதராசன். தமிழ் இலக்கிய வரலாறு (பதினொன்றாம் பதிப்பு) (11 ). சென்னை.
- Senthil Maruthaiappan. "தொண்டமண்டல சதகம் - Vallalar, வள்ளலார், Ramalinga Adigalar, Thiru Arutprakasa Vallalar, தயவு, திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், VallalarSpace, ThiruArutpa, Thiruvarutpa, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை". https://vallalar.org/Tamil/V000000153B.