தைரிய முத்துச்சாமி

தைரிய முத்துச்சாமி (Thiery Moutousammy) லார்டு கொசிட்டி (Lord Kossity) என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் ஒரு சொல்லிசைக் கலைஞர். இவர் பிரெஞ்சு அண்டிலிசுவின் மர்தினிக்கு தீவைச் சேர்ந்தவர். தற்போது இவர் பிரான்சு தலைநகர் பாரீசில் வசித்து வருகிறார்[1].

தைரிய முத்துசாமி

வாழ்க்கைக் குறிப்பு

பாரிசில் பிறந்த தைரிய முத்துசாமி தனது 11வது அகவையில் பெற்றோரின் பிறந்த இடமான கரிபியனில் உள்ள மர்தினிக்கிற்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தார். இவர் தனது இசைப்பயணத்தை 1990களில் தனது உறவினர் ஜெக்கில் என்பவரின் காண்ட்ராஸ்ட் இசைக்குழுவில் ஆரம்பித்தார்[1]. இதன் பின்னர் பல இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டில் மீண்டும் பாரீசிற்குக் குடிபெயர்ந்தார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Gutierrez, Evan C. "Lord Kossity Biography", Allmusic, retrieved 2011-03-05
"https://tamilar.wiki/index.php?title=தைரிய_முத்துச்சாமி&oldid=9491" இருந்து மீள்விக்கப்பட்டது