இந்து மதத்தில், 'தேவலர் ' என்பவர் பெரிய' ரிஷி 'அல்லது முனிவர்களில் ஒருவர். அவர் நாரதர் மற்றும் வியாசர் போன்றவர்கள் போல ஒரு சிறந்த அதிகாரியாக ஒப்புக் கொள்ளப்படுகிறார், மேலும் அர்ஜுனனால் பகவத் கீதை (10.13) யில் குறிப்பிடப்படுகிறார்.[1]

Devala Maharshi.jpg

பிறப்பு

தேவாங்க புராணத்தின் படி, தேவலர் தேவாங்கர் சமூகத்தின் மூலாதாரமாக விளங்குகிறார். [2] அனைவருக்கும் ஆடை வழங்கி வந்த "அக்னி மனு" வீடு பேறு பெற்ற பிறகு துணிகளுக்கான தேவை மிக அதிகமானது. ஆடைகளை உருவாக்கவும் உலகிற்கு நெசவு செய்ய கற்றுக் கொடுக்கவும் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து தேவலர் உருவானார் (அல்லது சிவபெருமானின் இதயத்தில் இருந்து என கொள்ளலாம்) .

தேவலரின் பங்கு

விஷ்ணுவின் தாமரை தொப்புளில் இருந்து நூல் பெற்று வரும் வழியில் ஐந்து அசுரர்களின் ஒரு குழு அவரைத் தாக்கியது, அமாவாசை இருட்டில் அவர்கள் வலிமை மிக அதிகமாக இருந்தது. தேவலர் விஷ்ணுவின் சக்கரத்தை கொண்டு போராடி தோற்றார், கடைசியில் அவரை பாதுகாக்க சக்தி அம்மனை வேண்டினார். தேவி சக்தி மகிமையுடன் இருளை விரட்டும் பிரகாசமான கிரீடம் அணிந்து, சூலம் மற்றும் இதர ஆயுதங்களை கையில் கொண்டு சிங்கத்தின் மீது தோன்றினார். கடைசியாக அவர் அசுரர்களை கொன்றார். அவ்வசுரர்களுடைய இரத்தம் வெள்ளை, கருப்பு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவ்வசுரர்களுடைய வண்ணமயமான இரத்தத்தில் தேவலர் நூலை சாயம் ஏற்றினார்.அன்று முதல் அந்த அம்மன், சௌடேஸ்வரி அல்லது சவுடேசுவரி (சௌட / சவுட / சூட = பிரகாசம்) என்று அறியப்பட்டார். பின்னர், ஒவ்வொரு அமாவாசை நாளிலும் அவளை வணங்கும்படி தேவலருக்கு அறிவுரை கூறினார். [3] பின்னர் தேவலர் இமயமலையின் தெற்கு பகுதிக்கு சென்று, ஆமோத நகரை தலைநகராக கொண்டு சகர நாட்டினை ஆண்டார். புதிய ஆடைகளை நெய்து மும்மூர்த்திகள், முப்பெரும்தேவிகள், தேவர் , அசுரர், கந்தர்வர், கின்னறர் மற்றும் சாதாரண மக்களுக்கு கொடுத்தார். தேவலர் மகாதேவரின் அங்கத்திலிருந்து தோன்றியதாலும், தேவர்களின் உடல் அங்கங்களை மறைப்பதற்கு துணிகளை அளித்தாலும் , அவரது சமூகத்தினர் தேவாங்கர் (அங்க= உடல்) என பெயரிடப்பட்டனர்.

திருமணம்

சூரியதேவனின் சகோதரி தேவதத்தையை மணந்தார். எனவே சூரியன் தேவாங்கர்களின் முதல் சம்பந்தி ஆவார். பின்னர் ஆதி சேடனின் மகள் சந்திரரேகையை மணந்தார், எனவேதான் தேவாங்க மக்கள் சேடர் / ஜேண்டர் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்னர் அசுரராஜன் வக்கிரதந்தனின் மகள் அக்னி தத்தையை மணந்தார். தேவலரைப் பின்பற்றுபவர்கள் தேவாங்க அல்லது தேவாங்கர் என்று அழைக்கப்படுகின்றனர்.[4] தேவலரின் பிரதான தெய்வம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆவார்.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=தேவலர்&oldid=27973" இருந்து மீள்விக்கப்பட்டது