தேமன் கால்கட்

தேமன் கால்கட் (Damon Galgut, பிறப்பு: 12 நவம்பர் 1963) தென்னாப்பிரிக்கப் புதின எழுத்தாளரும், நாடகாசிரியரும் ஆவார். இவரது "வாக்குறுதி" (The Promise) என்ற புதினத்திற்காக இவருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு கிடைத்தது. முன்னதாக 2003, 2010 ஆம் ஆண்டுகளில் இவரது நூல்கள் மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.[1]

தேமன் கால்கட்
Damon Galgut (2013).png
இயற்பெயர் தேமன் கால்கட்
Damon Galgut
பிறந்ததிகதி 12 நவம்பர் 1963 (1963-11-12) (அகவை 60)
பிறந்தஇடம் பிரிட்டோரியா, தென்னாப்பிரிக்கா
பணி
வகை நாடகம், புனைகதை, சிறுகதை
குறிப்பிடத்தக்க விருதுகள் புக்கர் பரிசு (2021)

வாழ்க்கைக் குறிப்பு

தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியாவில் பிறந்தவர் கால்கட்.[1][2] இவரது தந்தை யூதக் குடும்பத்தில் பிறந்தவர்.[3][4] ஆறாவது அகவையில், இவருக்கு நிணநீர்க்குழியப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[5]

கால்கட் பிரிட்டோரியா ஆண்கள் உயர்தரப் பள்ளியில் கல்வி கற்று 1981 இல் வெளியேறினார்.[6] பின்னர் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நாடகக் கலையில் பட்டம் பெற்றார்.[2]

இலக்கியப் பணி

கால்கட் தனது 17-வது அகவையில் A Sinless Season (பாவமில்லாத பருவம், 1982) என்ற புதினத்தை எழுதினார்.[7] பின்னர் 1988-இல் சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். இத்தொகுதியில் ஒரு தாய் தன் மகனின் நோயுடன் போராடுவதை விவரிக்கும் ஒரு குறும் புதினம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.[8][9] இவரது குவாரி (1995) என்ற புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டு 1988 இலும், பின்னர் 2020 இலும் வெளிவந்தது.[10][11]

தனிப்பட்ட வாழ்க்கை

கால்கட் ஓர் அகனன் ஆவார். இது அவரது எழுத்தில் ஆண் சார்ந்த உறவுகளில் அதிக கவனம் செலுத்த வழிவகுத்தது என்றும்,[12] ரூவால் டால் எழுதிய சிறுகதை "பன்றி" தனது எழுத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கால்கட் கூறுகிறார்.[13]

1990-களில் இருந்து கேப் டவுன் நகரில் வசித்து வருகிறார்.[14] இவர் தனது The Good Doctor (நல்ல மருத்துவர்) என்ற புதினத்தி கோவாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருந்து எழுதினார். இவர் யோகக் கலையில் மிகவும் ஈடுபாடுள்ளவர்.[15]

விருதுகளும் சிறப்புகளும்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Damon Galgut" (in en). மான் புக்கர் பரிசு இம் மூலத்தில் இருந்து 15 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210915004104/https://thebookerprizes.com/the-booker-library/authors/damon-galgut. 
  2. 2.0 2.1 Cornwell, Gareth; Klopper, Dirk; Craig, MacKenzie (2010). The Columbia Guide to South African Literature in English Since 1945. Columbia University Press. பக். 95. doi:10.7312/corn13046. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-50381-5. http://archive.org/details/columbiaguidetos0000corn. 
  3. Kona, Bongani (3 August 2021). "Sharp Read | Breaking the word" இம் மூலத்தில் இருந்து 4 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211104053723/https://www.newframe.com/sharp-read-breaking-the-word/. 
  4. Lenta, Margaret (14 September 2007). "Jewish writers and postcolonial choices in South Africa". in Stähler, Axel. Anglophone Jewish Literature. Routledge. பக். 171. doi:10.4324/9780203939222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-12142-7. 
  5. Babb, Andrew (January 2011). "Damon Galgut". World Literature Today 85: 5. https://www.proquest.com/docview/822629948. பார்த்த நாள்: 4 November 2021. 
  6. "Boys High Annual Events". p. 28 இம் மூலத்தில் இருந்து 15 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210915092522/https://boyshigh.com/wp-content/uploads/pdf/2006/Annual%20events.pdf. 
  7. Alter, Alexandra (3 November 2021). "Damon Galgut Wins Booker Prize for 'The Promise'" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 3 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211103204237/https://www.nytimes.com/2021/11/03/books/booker-prize-winner-damon-galgut-the-promise.html. 
  8. "'Writing is what I am'" (in en) இம் மூலத்தில் இருந்து 4 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211104180818/https://www.irishtimes.com/culture/books/writing-is-what-i-am-1.662146. 
  9. Kostelac, Sofia (3 July 2015). "The Singularity of Damon Galgut's Small Circle of Beings" (in en). Journal of Literary Studies 31 (3): 73. doi:10.1080/02564718.2015.1083173. பன்னாட்டுத் தர தொடர் எண்:0256-4718. 
  10. Lua error in Module:Citation/CS1 at line 3818: attempt to index local 'arch_text' (a nil value).
  11. Sobczynski, Peter (17 April 2020). "The Quarry movie review" (in en) இம் மூலத்தில் இருந்து 1 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211001184029/https://www.rogerebert.com/reviews/the-quarry-movie-review-2020. 
  12. Allfree, Claire (18 June 2008). "Damon Galgut's end of the rainbow" இம் மூலத்தில் இருந்து 14 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130514032706/http://metro.co.uk/2008/06/18/damon-galguts-end-of-the-rainbow-199253/. 
  13. Galgut, Damon (6 August 2021). "Damon Galgut: 'After reading Roald Dahl, the world never looked the same'" (in en) இம் மூலத்தில் இருந்து 13 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211013061509/https://www.theguardian.com/books/2021/aug/06/damon-galgut-after-reading-roald-dahl-the-world-never-looked-the-same. 
  14. "Damon Galgut: 'The Booker pulls a nasty little trick on you'". 4 September 2021. http://www.theguardian.com/books/2021/sep/04/damon-galgut-the-booker-pulls-a-nasty-little-trick-on-you. 
  15. Hashemzadeh, Kianoosh. "An Interview with Damon Galgut" இம் மூலத்தில் இருந்து 21 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130521073037/http://www.conjunctions.com/webcon/galgut11.htm. 
  16. MacDonald, Gayle (3 March 2004). "Itani, Taylor regional winners" (in en-CA). The Globe and Mail இம் மூலத்தில் இருந்து 4 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211104180816/https://www.theglobeandmail.com/arts/itani-taylor-regional-winners/article994696/. 
  17. Reuters (16 September 2003). "Women Dominate Britain's Booker Prize Shortlist". த நியூயார்க் டைம்ஸ். ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 4 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211104180830/https://www.nytimes.com/2003/09/16/books/women-dominate-britains-booker-prize-shortlist.html. 
  18. Pauli, Michelle (9 March 2005). "Final ten braced for Impac". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 22 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150922095547/http://www.theguardian.com/books/2005/mar/09/impacprize. 
  19. "SA Lit Rules the 2009 Commonwealth Writers' Prize Shortlists". Sunday Times Books LIVE. 18 February 2009 இம் மூலத்தில் இருந்து 25 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201025044942/http://bookslive.co.za/blog/2009/02/18/sa-lit-rules-the-2009-commonwealth-writers-prize-shortlists/. 
  20. "At a glance: Man Booker shortlist 2010" (in en-GB). BBC News. 12 October 2010 இம் மூலத்தில் இருந்து 15 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191015010341/https://www.bbc.com/news/entertainment-arts-11213404. 
  21. "Damon Galgut wins Booker Prize with 'tour de force' novel The Promise". BBC News. 3 November 2021 இம் மூலத்தில் இருந்து 3 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211103200426/https://www.bbc.com/news/entertainment-arts-59149960. 
"https://tamilar.wiki/index.php?title=தேமன்_கால்கட்&oldid=18680" இருந்து மீள்விக்கப்பட்டது