தேனி வட்டம்

தேனி வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தேனி நகரம் உள்ளது. தேனி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் தேனி, கொடுவிலார்பட்டி என 2 உள்வட்டங்களும், 12 வருவாய் கிராமங்களும் உள்ளது. அவைகள்:

படிமம்:Theni talukoffice.JPG
தேனி வட்டாட்சியர் அலுவலகம்
  1. அல்லிநகரம்
  2. கோவிந்தநகரம்
  3. ஜங்கால்பட்டி
  4. கொடுவிலார்பட்டி
  5. கோட்டூர்
  6. பூமலைக்குண்டு
  7. சீலையம்பட்டி
  8. தாடிச்சேரி
  9. தப்புக்குண்டு
  10. ஊஞ்சாம்பட்டி
  11. உப்பார்பட்டி
  12. வீரபாண்டி

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 54,239 வீடுகளும், 199,983 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 100,352 ஆண்களும்; 99,631 பெண்களும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.08% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 993 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19455 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 939 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 47,453 மற்றும் 43 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.84%, இசுலாமியர்கள் 2.42%, கிறித்தவர்கள் 1.6% & பிறர் 0.14% ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் 37.2% கிராமபுறங்களில் வாழ்கின்றனர். [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தேனி_வட்டம்&oldid=128950" இருந்து மீள்விக்கப்பட்டது