தேசிய கணித ஆண்டு

தேசிய கணித ஆண்டு (National Mathematics Year) இந்தியாவிலும் நைசீரியாவிலும் 2012 ஆம் ஆண்டை தேசிய கணித ஆண்டாக கொண்டாடினார்கள். இந்தியாவில் கணித மேதை சிறீனிவாச ராமானுசன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் பிறந்தார். இவருடைய 125 ஆவது பிறந்த நாள் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 என்பதால் இந்தியாவில் அன்று கொண்டாடப்பட்டது. [1] [2] நைசீரியாவில், கணிதப் படிப்பை ஊக்குவித்து பிரபலப்படுத்தும் அந்நாட்டு அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக 2012 ஆம் ஆண்டை தேசிய கணித ஆண்டாக அவர்கள் கடைபிடித்தார்கள்.[3] [4]

இந்தியாவில் தேசிய கணித ஆண்டு

பிப்ரவரி 26 அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தொடக்க விழாவின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 2012 ஆம் ஆண்டை தேசிய கணித ஆண்டாக அறிவிக்கும் முடிவை அறிவித்தார். 2012. டிசம்பர் 22 தேசிய கணித தினமாக 2012 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

தேசிய கணித ஆண்டைக் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக திட்டங்களை வகுக்கவும் செயல்படுத்தவும் ஓர் அமைப்புக்க்குழு உருவாக்கப்பட்டது. ராமானுசன் கணித சங்கத்தின் தலைவர் பேரசிரியர் எம்.எசு ரகுநாதன் அமைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். ராமானுசன் கணித சமூகத்தின் செயலாளராக இருந்த பேராசிரியர் தினேசு சிங், அமைப்புக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். கபில் சிபலுக்கான அமைச்சரைக் கொண்ட ஒரு தேசியக் குழு இவ்வமைப்புக் குழுவின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டது.[5]

நைசீரியாவில் தேசிய கணித ஆண்டு

நைசீரியாவில், தேசிய கணித ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் கணிதம்: மாற்றத்திற்கான ஒரு திறவுகோல் என்பதை மையமாகக் கொண்டிருந்தது. நிகழ்வுகள் 2012 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் தேதியன்று அபுசாவின் மூசா யர் அதுவா தோம் நகரில் நடந்த விழாவில் துவக்கப்பட்டது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 13 திட்டங்கள் திட்டமிடப்பட்டன.

மேற்கோள்கள்

  1. "PM's speech at the 125th Birth Anniversary Celebrations of Ramanujan at Chennai". Government of India இம் மூலத்தில் இருந்து 29 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120729041631/http://pmindia.nic.in/speech-details.php?nodeid=1117. 
  2. "Manmohan's concern over decline in quality of maths teachers". http://www.thehindu.com/news/national/article2749097.ece. பார்த்த நாள்: 20 April 2012. 
  3. "FG declares 2012 National Mathematics Year" இம் மூலத்தில் இருந்து 5 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405150129/http://tribune.com.ng/index.php/news/36643-fg-declares-2012-national-mathematics-year. பார்த்த நாள்: 20 April 2012. 
  4. "Jonathan proclaims 2012 as National Mathematics year" இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923212557/http://www.dailytrust.com.ng/index.php?option=com_content&view=article&id=155049:jonathan-proclaims-2012-as-national-mathematics-year&catid=1:news&Itemid=2. பார்த்த நாள்: 20 April 2012. 
  5. "Year-long celebration". தி இந்து. 26 December 2011. http://www.thehindu.com/sci-tech/science/article2746997.ece. பார்த்த நாள்: 20 April 2012. 
"https://tamilar.wiki/index.php?title=தேசிய_கணித_ஆண்டு&oldid=25426" இருந்து மீள்விக்கப்பட்டது