தெள்விளி
தெள்விளி என்பது ஒருவகையான விளையாட்டு ஓசையும், தொழிலோசையும் ஆகும். குலவை, வீளை முதலான நாவோசைகள் இதன் வகைகள்.
தெள்விளி ஓசை
- இணைப்பறவைக்காக புறா [1], பருந்து [2] [3] ஆகியவை எழுப்பும் குரல் தெள்விளி எப்படிக் கேட்கும் என்பதை உணர்த்தும் உவமைகள். கொம்பு ஊதும் ஓசை [4], பறை முழக்கம் [5] ஆகியனவும் தெள்விளிக்கு உவமை. கோவலர் ஊதும் குழலோசையில் வரும் தெறிப்பிசை [6] [7] பார்வை வேட்டுவன் [8] வலையில் பட்ட ஆண்மான் புலம்பும் குரல் [9] ஆகியனவும் தெள்விளி ஓசைக்கு எடுத்துக்காட்டுகள்.
ஆடவர் தெள்விளி
மகளிர் தெள்விளி
தினைப்புனம் காக்கும் மகளிர் தெள்விளி எழுப்பிக் கிளிகளை ஓட்டுவர். [12]. எழுந்தெழுந்து தெள்விளி பயிற்றி ஓட்டுவர். [13]. அந்தத் தெள்விளி கேட்டு மயில் ஆடுவதும் உண்டு. [14]
அடிக்குறிப்பு
- ↑ அம் சினை வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி, (நற்றிணை 305)
- ↑ இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி (குறுந்தொகை 207)
- ↑ வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் கிளைத் தரு தௌ விளி கெழு முடைப் பயிரும் (அகநானூறு 363)
- ↑ வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப, {அகநானூறு 269)
- ↑ கோடைத் தௌ விளி விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, (அகநானூறு 321)
- ↑ கோவலர் ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற (குறிஞ்சிப்பாட்டு 222)
- ↑ பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தௌ விளி, (அகநானூறு 399)
- ↑ பார்வைக்குப் பெண்மானை வைத்து ஆண்மானைப் பிடிக்கும் வேட்டுவன்
- ↑ பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி, சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் (நற்றிணை 212)
- ↑ பகடு தெழி தௌ விளி (அகநானூறு 17)
- ↑ அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப (அகநானூறு 41)
- ↑ புள்ளார் இயத்த விலங்குமலைச் சிலம்பின், வள்ளுயிர்த் தெள்விளி இடையிடைப் பயிற்றிக, கிள்ளை யோப்பியும் (குறிஞ்சிப்பாட்டு 100, )
- ↑ எழுந்து எழுந்து, கிள்ளைத் தௌ விளி இடைஇடை பயிற்றி, ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், (அகநானூறு 28)
- ↑ எல் வளை மகளிர் தெள்விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும் (பதிற்றுப்பத்து 27)