தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்
தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில் (திருஆருர்ப் பரவையுள் மண்டளி) சுந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 89ஆவது சிவத்தலமாகும்.முன்பு, இத்திருக்கோயில் கடலிலுள் மண்கோயிலாக அமைந்திருந்தது என தலவரலாறு குறிப்பிடுகிறது.
தேவாரம் பாடல் பெற்ற திருஆருர்ப் பரவையுள் மண்டளி தூவாய் நாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருஆருர்ப் பரவையுள் மண்டளி, ஆருர்ப்பரவையுண்மண்டளி |
பெயர்: | திருஆருர்ப் பரவையுள் மண்டளி தூவாய் நாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தூவாநாயனார் கோயில் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தூவாய் நாதர் |
உற்சவர்: | சத்தியவாகீஸ்வரர் |
தாயார்: | பஞ்சின் மென்னடியாள் |
தல விருட்சம்: | பலா |
தீர்த்தம்: | ஆகாச தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
அமைவிடம்
இத்திருக்கோயில் திருவாரூர் கோயிலின் தேர் நிலைக்கு அருகில், கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது.
அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவர் முன்பாக இடது புறத்தில் விநாயகர் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர், சுப்ரமணியர், சனீசுவரன், இறைவி, சண்டிகேசுவரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் தூவாய் நாதர், இறைவி பஞ்சின் மென்னடியாள்.